படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

நீயாகப்படரும் முற்றம்

விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான் கூட்டக் கூட்ட இலைப்பச்சையாகி வளர்கிறது! யாரோ வெயிலைப் பிய்த்து துண்டு...

முத்துராசா குமார் கவிதைகள்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர்...

கலீலியோவின் இரவு

சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன பேரரசுகள். முன்னை கிழக்கில் இருந்து கிளம்பிய...

புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2

“இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்?  ஏன் அந்த புத்தகம் ?” இந்த கேள்வியை புத்தாண்டை முன்னிட்டு படைப்பாளர்களிடம் கனலி கலை இலக்கிய இணையதளம்...

புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 1

கனலி கலை - இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து  ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது  புதிய புதிய  முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற  புத்தாண்டு 2020 ல்  எழுத்தாளர்கள்,...

க.மோகனரங்கன் கவிதைகள்

1)அணுக்கம் எனது ஆயுள் பரியந்தம் நீந்தினாலும் கடக்கமுடியாத கடலுக்கு அப்பால் அக்கரையில் நிற்கிறாய் நீ நினைத்தால் நிமிடங்களில் நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு இதோ இக்கரையில்தான் இருக்கிறேன் நான். 2) பிராயம் அப்படியேதான் இருக்கிறாய் என்பது அம்மா எவ்வளவோ மாறிவிட்டேன் என்கிறாள் மனைவி தொட்டுப்பேசக் கூசுகிறான் வளர்ந்துவிட்ட மகன் நீயே பார்த்துக்கொள் என்று காதோர நரையைக் காட்டுகிறது கண்ணாடி இடுப்பிலிருந்து இறங்கப் பார்க்கும் கால்சட்டையை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி மறுகையால் பையில் உருளும் கண்ணாடி கோலிகளைத் தொட்டெண்ணும் சிறுவன் எனது விரலுக்குச் சிக்கியும் மனதுக்குத் தப்பியும் நடுவில்...

அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது

30 கக்கடைசியில் ஏர்வாடி தர்க்காவில் அம்மாவைச் சேர்த்தோம். சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில் என் தலை தடவினாள். அப்போது கலைந்த முடியை எத்துணை முறை சீவியும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. 29 வெள்ளி அன்று அம்மா பூண்டிருப்பது மௌனமா விரதமா தனிமையா தெரியாது அன்றைய மதிய உலை கொதபுதா என்று கொதிய வேடிக்கை பார்ப்பாள். 28 அம்மாவின் காதோரச் சுருள்முடியிடம் அப்பாவுக்கு இருந்த பயபக்தி என்...

ஒரு நாள் கழிந்தது

அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம்...

நாஞ்சில் நாடன் கதைகள்

நாஞ்சில் நாடன் புனைவுலகின் மிகப்பெரிய பலம் அதன் வட்டாரத்தன்மை ஒரு படைப்பு வட்டாரத்தன்மையால் மட்டும் அதன் இலக்கிய மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தோடு கொள்ளும் உறவில் திரண்டு வருகிறது. ஒரு படைப்பு தன்...

ஔஷதக் கூடம்

அப்பாவுக்கு புற்றுதானாம். உறுதியாகிவிட்டது. மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை நிராகரித்துவிட்டார் மருத்துவர். சங்கதி தெரியாமல் பேத்தியின் பிரதாபங்களில் தோய்கிறார் அப்பா. கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக அப்பாவின் பேச்சுக்கெல்லாம் பக்கத்துப் படுக்கைக்காரர் முகிழ்நகை செய்கிறார். அவரது தொண்டையில் துளையிட்டிருக்கிறார்கள். இப்போது எப்படி இருக்கிறது? ’பரவாயில்லை’ ’காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை’ ’பரவாயில்லை’ ”செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை’ ’பரவாயில்லை..... பரவாயில்லை’ ’வலி மிகும்...