அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்

ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி

ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது.  இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...

மேரி ஆலிவர் கவிதைகள்

கற்களால் உணரயியலுமா? கற்களால் உணரயியலுமா? அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா? இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும் அமைதியடையச் செய்துவிடுமா? நான் கடற்கரையில் நடக்கும்போது வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப் பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன் பிறகு அவ்விதமே செய்கிறேன். மரம் தனது பல கிளைகளை உயர்த்தி உவகையடைகிறதே, ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா? முகில்கள் தங்களது மழைமூட்டையை அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா? உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று. நான் அத்தகைய முடிவை எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன். ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும். ** நான் கடற்கரைக்குச் சென்றேன் நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன் நேரத்திற்கேற்ப அலைகள் வந்துபடியும் சென்றபடியும் இருந்தன, ஓ, நான் சோகமாக இருக்கிறேன் என்ன செய்யட்டும்— நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன். தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது: மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது. ** எப்போது அது நிகழ்ந்தது? எப்போது அது நிகழ்ந்தது? “நிறையக் காலத்திற்கு முன்பு” எங்கு நிகழ்ந்தது? “தூராதி தூரத்தில்” இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது? “எனது இதயத்தில்” இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்? “நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!” **   இந்தக் காலையில்  இந்தக் காலையில் செங்குருவிகளின் முட்டைகள் பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள் உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாது உணவு எங்கிருந்து வருகிறது என்று, வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!” வேறு எது குறித்தும்,...

வாழ்க்கை விதி

முதியவர் காஸ்கூஷ் பேராவலோடு கவனித்தார். அவருடைய பார்வை மங்கிப்போய் பல காலமானாலும், ஒரு சின்ன சத்தமும் வற்றியுலர்ந்த நெற்றிக்குப் பின்னாலிருக்கும், ஆனால் உலக விவகாரங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பதிலிருந்து விடுபட்டிருக்கும் பிரகாசமான மதிநுட்பத்தை ஊடுருவிச்...

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே: நேர்காணல்

கே: எப்போது எழுதுகிறீர்கள்? கறாரான வழமை உண்டா? பதி: காலை வெளிச்சம் படத் தொடங்கியதுமே எழுதத் தொடங்கிவிடுவேன். அப்போது உங்களைத் தொந்தரவு செய்யயாருமில்லை, குளிர்ந்திருக்கும், எழுதும்போது கதகதப்பாகிவிடும். அடுத்து நிகழ்வது என்னவென்று தெரிந்தால் எழுதுவதை...

மஞ்சள் சுவர்த்தாள்

என்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று...

விழிப்பு

"துறைமுகத்தில் இறங்கி நிலத்தில் அடியெடுத்துவைத்த ஒடீசியஸ், மரங்களடர்ந்த பகுதியை நோக்கிச் செல்லும் கரடுமுரடான பாதையின் வழியே ஏதேனே கூறியிருந்த மலையின் உச்சியை நோக்கி நடந்தான்..." கொஞ்ச நேரம் படித்தான் ரிச்சர்ட். இருப்புக்கொள்ளவில்லை என்றாலும் தன்னிடம்...

விதியை நம்புபவன்

சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம்...

எலிஸபெத் பிஷப் கவிதைகள்.

காத்திருப்பு அறையில் மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில், பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன் நானும் சென்றிருந்தேன். அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன். அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர், கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...

பழுப்பு நிறப் பெட்டி

அவன் வாழ்ந்த முதல் வீட்டின் இரண்டாவது மாடியில் அந்த மரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. அது அப்படி ஒன்றும் ஒதுக்குப்புறமான இடமில்லை. தன் வாழ்வில் வேறு எங்கும் வாழப் போவதில்லை என்று அவன் நினைத்திருந்த அந்த...

ஒரு நீதிக்கதை

முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட...