மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

பழுப்பு நிறப் பெட்டி

அவன் வாழ்ந்த முதல் வீட்டின் இரண்டாவது மாடியில் அந்த மரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. அது அப்படி ஒன்றும் ஒதுக்குப்புறமான இடமில்லை. தன் வாழ்வில் வேறு எங்கும் வாழப் போவதில்லை என்று அவன் நினைத்திருந்த அந்த...

இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா

பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில்    மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே  கூரைகளின்  மேல்  தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜனவரி மாதத்தின் வெளிர்  காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற...

ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்

நான் ஒரு விதையைவிடச் சிறியதாக ஒரு கருவாகக் கருவறையிலிருந்த போது என்னுள் இருந்த சிற்றிருள் என்னை அடிக்கடி அழச்செய்யும். நான் சுருக்கங்களுடன், வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மிகச்சிறியவளாக இருந்தபோதும் கூட, அப்போது என்...

கணவனுக்கான தையல்

(இந்தக் கதையை நீங்கள் சத்தம் போட்டுப் படிக்கிறீர்கள் என்றால் கீழே குறிப்பிட்ட தொனியில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு உங்கள் குரலில் மாற்றங்கள் செய்து படியுங்கள். குழந்தையாக நான் : கீச்சென்ற ,எளிதில் மறக்கக்கூடிய வகையில்...

அவன் மனைவிக்குத் தெரிந்துவிடக்கூடாது

பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி நதிக்கரையோரம் ஒரு மேய்ச்சல் நிலத்தின்...

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

என்‌‌ ‌‌ஊதா‌‌ ‌‌நிற‌,‌ ‌‌வாசனை‌‌ ‌‌திரவியம்‌‌ ‌‌தோய்ந்த‌‌ ‌‌புதினம்‌ ‌

 உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த என் நண்பன் நாவலாசிரியர் ஜோசிலின் டர்பேட்டை தெரிந்திருக்கும், அவனது ஞாபகங்கள் சிதைந்து வருவதை என்னால் உணர முடிகிறது. அவனைப் பற்றிய உங்கள் எண்ண அலைகள்,...

வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை

அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ், ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம்...

கரிய பூனை

இப்போது நான் சொல்லவிருக்கிற மிகக் கொடூரமான, அதே சமயம் மிக இயல்பான, கதையின்பால் உங்களது நம்பிக்கையைக் கோரவோ எதிர்நோக்கவோ இல்லை. என் சொந்த புலன்களே தான் கண்டவற்றை நம்ப மறுக்கும்போது உங்களிடம் அதனை...

முகமூடி மனிதர்கள்

குமாரி அடெலா ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பலசரக்கு கடைக்கு போவதற்காக, பிரதான சாலைக்கு ஒயிலாக நடந்து வந்தாள். நேற்று இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் சிறிய நகரம் பளிச்சென்று அலம்பி விடப்பட்டது போல...