நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்

நகுலன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

பிரசாரம்

எங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக...

நகுலனின் கவிமொழி

புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து...

நன்றாக குடி

நன்றாக குடி 1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...

நகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)

 இப்பொழுதெல்லாம் எழுதுவதில் அயர்ச்சியும் சிரமமும் அதிகமாக இருக்கிறது. சில நேரங்கள் மொழிபெயர்ப்புகளும்,  கவிதை வாசிப்பும், அவ்வாசிப்பின் அனுபவங்களும் என் புறச்சூழலைச் சமாளிக்கச் சரியாகிவிடுகிறது.  பதற்ற நிலை ஒவ்வொரு வடிவில்,  இருப்பைக் குலைப்பதில் சரியாகத்...

நகுலன் – குதிரை மொழியில் எழுதியவர்

மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, சுசீலா, நாய்கள், மதுக்கோப்பை, அடர் இருண்மை போன்றவற்றின் கலவைதான் நகுலன் என்று பேசுவதுண்டு. நகுலனை ஆராதிப்பவர்களும் மனப்பிறழ்வைக் கொண்டாடிய நகுலனை இவ்வாறு சொல்வதை ஏற்கனவே செய்தனர். நகுலன் எழுத்தாளரே...

நகுலன் கவிதைகள்

காத்த பானை காத்த பானை கொதிக்காது கரும்பு கசக்காது வேம்பு இனிக்காது என்றாலும் என்ன செய்தாலும் என் மனமே வந்தபின் போக முடியாது போனபின் வர முடியாது என்றாலும் என்ன செய்தாலும் என்றென்றே சொல்லிச் சலிக்கும் என் மனமே ஊமையே உன்மத்த கூத்தனே வாழ ஒரு வழி சாக ஒரு மார்க்கம் சொல்லவல்ல...

நகுலனின் விலகல் கண்ணோட்டம்

நகுலன் எப்பொழுதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நகுலனுடைய கலையின் வசீகரம் என்று தோன்றுகிறது. ரோகிகள் நாவல்...

மரத்தை மறைத்தது மாமத யானை

எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும் அவருக்கு அனுப்பியிருந்தேன். பிறகு கடிதம்...

அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை

நகுலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை...