நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்

நகுலன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

நகுலனின் நிலவறை

நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. 1921 ஆகஸ்ட் 21ல் பிறந்தார். மறைவு 2007 மே 17. இந்தக் கட்டுரையில் நகுலனின் கவிதைகள், அவற்றுக்கான பின்புலம் குறித்துப் பார்க்கலாம். சிறுசிறு தொகுப்புகளாக மூன்று, ஐந்து,...

அந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு

மனிதனின் மனசாட்சிப் பிரச்சனைகளுக்கு தீர்மானமான கலைவடிவம் தந்தவர் என்று ஆல்பெர் காம்யூவைச் சொல்வார்கள். அவரை போன்றே தனிமையை அலங்கரிக்கத் தெரிந்தவர் நகுலன். தனிமையை அலங்கரிக்கும் கலையோடு தொடர்புடைய சொற்களைத் தேடியலைந்தபடிதான் இவரது கவிமனம் இருக்கிறது....

நகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)

 இப்பொழுதெல்லாம் எழுதுவதில் அயர்ச்சியும் சிரமமும் அதிகமாக இருக்கிறது. சில நேரங்கள் மொழிபெயர்ப்புகளும்,  கவிதை வாசிப்பும், அவ்வாசிப்பின் அனுபவங்களும் என் புறச்சூழலைச் சமாளிக்கச் சரியாகிவிடுகிறது.  பதற்ற நிலை ஒவ்வொரு வடிவில்,  இருப்பைக் குலைப்பதில் சரியாகத்...

நகுலனுடனான நேர்காணல்…

எழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும் அவரவர் பேச்சு நடையிலேயே தொகுத்துத்...

அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை

நகுலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை...

பிரசாரம்

எங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக...

தங்கக்குடம்

ரமணி தன் தாயாருடன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அன்று திங்கட்கிழமை, மணி ஒன்பது இருக்கும். அவன் தாயார் எட்டரை மணிக்குச் சமையலை முடித்து விடுவாள். அவனுக்கு பத்து மணிக்கு மேல் கல்லூரிக்குப் போனால் போதும்....

கடிதத்தில் நாவல்

ஒரு முற்றுப்பெறாத கடித வடிவத்தில் எழுதிய “கடிதங்கள் நவீனன் சுசீலாவுக்கு எழுதியவை” என்ற நாவலில் முற்றுப் பெறாத முதல் அதிகாரம். நகுலன் அன்புடைய சுசீலாவுக்கு, எப்பொழுதும் உன் ஞாபகம்தான். ஆனால் உனக்குத் தெரிந்ததுதானே! நான் எப்பொழுதுமே...

வந்து போகும் அர்ச்சுனன்

அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களைப் பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை. சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை. அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்...

நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்

நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை....