Tag: கனலி-25
இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்
நாங்கள் இருபத்தாறு ஆண்கள், இருபத்தாறு உயிர் வாழும் இயந்திரங்கள். புழுக்கமான நிலவறைக்குள் அடைபட்டு, காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து க்ரிங்கில் மற்றும் உப்பு பிஸ்கட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிலவறையின் ஜன்னல்களுக்கு...
ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.
பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள்.
அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற்...
புற்று-பாவண்ணன்
”எல்லாமே உயிருள்ள மீனுங்க பார்வதி. பானையில தண்ணிக்குள்ள சலக்குபுலக்குனு வட்டமடிக்குதுங்க. எங்க தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்தாரு. இது போதும் ஒன் தொட்டிக்கு. ஊட்டுக்கு எடுத்தும்போன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும்...
கொம்பற்றவன்-வி அமலன் ஸ்டேன்லி
'சவுரி மறுபடியும் காணாம போயிட்டான்' என்பதுதான் உறவு வட்டத்தில் பேச்சாக இருந்தது. ஆனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படித் தீவிரமாகத் தேடி அலைந்ததெல்லாம் அவன் வாலிபனாக இருந்தது வரைதான். இப்போது அவன் ஐம்பதைத்...
சமிதை-செந்தில் ஜெகன்நாதன்
சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றிருந்தேன். மாநகரத்து பிரம்மச்சாரி வாழ்க்கையில் கடை உணவுகளால் செத்துப் போயிருந்த நாக்குக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் தன் சமையல் மூலம் உயிரளிப்பாள் அம்மா. அன்றைக்கு நண்பகலில் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணயர்ந்திருந்தேன்....
இலக்கியத்தில் சாதாரணத்துவமும் அசாதாரணத்துவமும்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
ஒரு பொருள் அல்லது ஒரு நிகழ்வு சாதாரணமாக மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவும், சமூகப் புழக்கமும் தேவைப்படுவதோடு, அந்தப் பொருளின் அல்லது நிகழ்வின் பங்கும், பணியும் நமது அன்றாடத்தின் ஓர் அங்கமாக...
ஓங்குமினோ, ஓங்குமினோ-சரவணன் மாணிக்கவாசகம்
மது, சூதாட்டம் போல இலக்கியம் என்பது கூட ஒரு போதை தான். முன்னிரண்டில், மூளை வேண்டாம் என்று சொல்லச்சொல்ல மனமும், உடலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணப்படுவது போல இலக்கியத்திலும் நடக்கிறது. மனைவியின்...
தேவதேவன் கவிதைகள்
அபிநயம்
அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை?
இளைப்பாறல்
போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில்.
ஒவ்வொரு மனிதனையும்
ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்?
கடவுளும் சாத்தானும்
அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய...
க.மோகனரங்கன் கவிதைகள்
1)சிறிது வெளிச்சம்
எண்ணும் போதெல்லாம்எடுத்துப் பார்க்கஏதுவாகப்பணப்பையினுள்பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்,கடந்தகால மகிழ்ச்சியின்அடையாளமாகஅந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை.மறதியின்மஞ்சள் நிறம் படர்ந்துமங்கிவிடாதிருக்க வேண்டிமனதின்இருள் மறைவில்,நிதமும் அதைநினைவின் ஈரத்தில்கழுவியெடுத்துக்காயவைப்பேன்.வயோதிகத்தின் நிழல்கள் கவிந்துகனவுகளின் வர்ணங்கள்மெல்ல வெளிறத் தொடங்கும்இம் மத்திம வயதிலும்ஒரு பொழுது வாழ்ந்தேன் என்பதன்...
ஆனந்த்குமார் கவிதைகள்
சில்லறை
ஒரு பெரியரூபாய் நோட்டு மொத்தமும்சட்டென உடைந்துசில்லறைகளாய் மாறிவிட்டதைப்போலஒரு சின்னத் தடுக்கல்அந்த ஆளுயரக் கண்ணாடியைப்பிரித்துவிட்டதுஆயிரம் சின்ன கண்ணாடிகளாய்.ஒவ்வொரு சில்லிலும்இப்போது தெரிவதுஒரு குட்டி மிட்டாய்.சுவைத்துச் சுவைத்தாலும்ஒரு மிட்டாயின் ஆயுள்குறைந்தது இரண்டு நிமிடங்கள்.அவனது ஆளுயரம் இப்போதுஇரண்டிரண்டு குட்டி...