Tag: மொழிபெயர்ப்புச் சிறுகதை
நடன விருந்துக்குப் பிறகு-லியோ டால்ஸ்டாய்
“ஒருவன் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தானே சுயமாகப் பகுத்தறிய இயலாது என்றும் அவனுடைய சூழ்நிலைதான் அதை முடிவு செய்கிறது என்றும் நீங்கள் சொன்னாலும், தற்செயல் நிகழ்வுகளே எல்லாவற்றுக்கும் காரணம் என்பேன்...
நீலக்கண்கள்-ஐசக் தினேசன்
நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு...
தாம்பத்தியம்-சாரா ஜோசப் ...
இன்று அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி. உண்மையில் நான் நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பினேன். இதோ இப்போது அவளெதிரே. ஆனால் அவள் என்மீது...
இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா
பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற...
இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை -கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: கா. சரவணன்
விடிந்தும் விடியாததுமாக டமாஸோ தனது அறைக்குத் திரும்பினான். ஆறு மாத கர்ப்பிணியான அவனுடைய மனைவி அனா நன்றாக உடையணிந்து, காலணிகளை மாட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த எண்ணெய் விளக்கும்...
ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்
நான் ஒரு விதையைவிடச் சிறியதாக ஒரு கருவாகக் கருவறையிலிருந்த போது என்னுள் இருந்த சிற்றிருள் என்னை அடிக்கடி அழச்செய்யும். நான் சுருக்கங்களுடன், வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மிகச்சிறியவளாக இருந்தபோதும் கூட, அப்போது என்...
கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்
எங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக..
பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன்.
என்னோடு என் இரண்டு அண்ணன்கள்,...
அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்
எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி, ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத் திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள...