இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...

கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.

1. வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன. காதுகளில் வண்டொன்று சத்தமிடுகிறது. காலங்கள் கலைந்து தோன்றுகின்றன. கண்கள் நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன. மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும் சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது. அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி கள்மனம். மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய உடல். இடைவெளிகளை உடைத்து விடுகின்ற காலம். கற்பனைகளை அள்ளிய கைகள்...

காணாமல் போவது எத்தனை வசீகரமானது.

தினம் தினம் எத்தனையோ பேர் காணாமல் போகிறார்கள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் மனநிலை சரியில்லாதவர்கள். காணவில்லை விளம்பரங்கள் செய்தித்தாள்களில் தொடர்ந்து வருகின்றன.   அவள் மட்டும் தொலைவதே  இல்லை எங்கு போனாலும் வழி தெரிந்து விடுவது கொடுந் துயரம். காணாமல் போகக்கூட ஆணாக வேண்டும்   தொலைவதற்கு முன்பான முன்னேற்பாடுகளின் பட்டியல் நெடுஞ்சிகை மழித்தல் காயம் முற்றும் மூடும் காவி ருத்ராட்ச மாலை திருவோடு அணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கை ஏதோவொரு...

சுகுமாரன் கவிதைகள்

லியான்ஹுவாவின் காதலர் திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார் திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார். திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார். திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும் தனித்தனியே வாழ்ந்தனர் எனினும் இருவரும் நண்பர்களாக இருந்தனர். திரு....

கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை

1. பொழியும் பொழியும் போதே உறையும் இறுகும் இறுக இறுக கனக்கும் உடையும் உடைந்து கீறி வாளென அறுக்கும் மிதக்கும் மிதந்து மேகதாதாகி புகையும் உறிஞ்சும் உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும் நகர்த்தும் நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும் நிறையும் நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும் அதன் பெயர் பனியென்கிறார்கள் அதன் பெயர் நாம்   2 இந்த அதிகாலையில்...

தேவதேவன் கவிதைகள்

புன்னகைகள்தாம் புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்யாருடையதுமான காதற் பேருலகையும்…கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோகடவுள்களும் தத்துவ ஆசிரியர்களும்? இங்கிருந்துதான் இங்கிருந்துதான் நாம்எதையும் ஏற்றுக்கொண்டும்எதையும் மறுத்துக்கொண்டும்இருக்கலாம். இங்கிருந்துதான் அதுநம்மை தேர்ந்துகொண்டுநிகழவேண்டியதையெல்லாம்நிகழ்த்துவதைப் பார்க்கலாம். என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்எனத் தெரிந்தவன்எதையும் செய்யாமல்அதைத்தான்...

அர்ஜூன்ராச்-கவிதைகள்

1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம் கத்திரியைக் கையளிப்பதுமற்றும்ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வதுதொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுநேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து...

இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்   மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய் கிடைக்கிறது. அவளுக்கு சந்தோசமில்லை   தாத்தா நம்ம வீட்டுக்கு...

ஸ்ரீவள்ளி கவிதைகள்

திருவிருந்து விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில் கோரைக் கிழங்குகள் கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில் காட்டுக் காளான்கள் பயனில்லை அவற்றால் நேசிப்பவரைத் தொடும் போது இருப்பின் சிவப்பு மொத்தமும் விரல்களாகித் தொட வேண்டும் துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக் கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும். காதலின் பரிசுத்த...