எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.

1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர்.   வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன.   மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம் பழங்களால் பனங்கிழங்கு அலகுடைய செங்கால் நாரைகள் ஆடும் வீட்டினை அடை...

க.மோகனரங்கன் கவிதைகள்

1)அணுக்கம் எனது ஆயுள் பரியந்தம் நீந்தினாலும் கடக்கமுடியாத கடலுக்கு அப்பால் அக்கரையில் நிற்கிறாய் நீ நினைத்தால் நிமிடங்களில் நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு இதோ இக்கரையில்தான் இருக்கிறேன் நான். 2) பிராயம் அப்படியேதான் இருக்கிறாய் என்பது அம்மா எவ்வளவோ மாறிவிட்டேன் என்கிறாள் மனைவி தொட்டுப்பேசக் கூசுகிறான் வளர்ந்துவிட்ட மகன் நீயே பார்த்துக்கொள் என்று காதோர நரையைக் காட்டுகிறது கண்ணாடி இடுப்பிலிருந்து இறங்கப் பார்க்கும் கால்சட்டையை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி மறுகையால் பையில் உருளும் கண்ணாடி கோலிகளைத் தொட்டெண்ணும் சிறுவன் எனது விரலுக்குச் சிக்கியும் மனதுக்குத் தப்பியும் நடுவில்...

பயோ வார்

இறக்கப்போகிறேன் எதனால் இறப்பேன் என்பதை அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம் உங்களிடம் சொல்லிப் போகிறேன் பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை விட்டுப் போகிறேன். விரிசலில்லாத பழுத்தக் காதலை விரிந்த மேகத்தில் பதித்து மெல்ல மெல்ல கனிச்சாறு என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த காதல் கணவரை விட்டுப்போகிறேன். கரம்கொடுப்பேன் என மூளையின் சிவந்த...

ஸ்ரீநேசன் கவிதைகள்

சூரியனுடன் வருவேன் நான் இங்கிருப்பேன் இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன் மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...

க.மோகனரங்கன் கவிதைகள்

1)சிறிது வெளிச்சம் எண்ணும் போதெல்லாம்எடுத்துப் பார்க்கஏதுவாகப்பணப்பையினுள்பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்,கடந்தகால மகிழ்ச்சியின்அடையாளமாகஅந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை.மறதியின்மஞ்சள் நிறம் படர்ந்துமங்கிவிடாதிருக்க வேண்டிமனதின்இருள் மறைவில்,நிதமும் அதைநினைவின் ஈரத்தில்கழுவியெடுத்துக்காயவைப்பேன்.வயோதிகத்தின் நிழல்கள் கவிந்துகனவுகளின் வர்ணங்கள்மெல்ல வெளிறத் தொடங்கும்இம் மத்திம வயதிலும்ஒரு பொழுது வாழ்ந்தேன் என்பதன்...

சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்   மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய் கிடைக்கிறது. அவளுக்கு சந்தோசமில்லை   தாத்தா நம்ம வீட்டுக்கு...

கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.

1. வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன. காதுகளில் வண்டொன்று சத்தமிடுகிறது. காலங்கள் கலைந்து தோன்றுகின்றன. கண்கள் நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன. மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும் சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது. அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி கள்மனம். மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய உடல். இடைவெளிகளை உடைத்து விடுகின்ற காலம். கற்பனைகளை அள்ளிய கைகள்...

ஞா.தியாகராஜன் கவிதைகள்.

1. அப்போதுதான் அதிசயமாக யாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அது வேறுவழியில்லாமல் அன்றைக்குதான் முதன்முதலாக அதை முயற்சித்தேன் மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றி எனக்கெதுவும் தெரியாது. 2. யார் சொல்வதற்கு முன்பும் முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச் சொல்லிவிடுகிறேன் இருந்தாலும் ஒரு தடவை அவர்களும் அதை சொல்லிவிடுகிறார்கள் நான்...

தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்

1 தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு சற்று தூரத்தில் சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன் கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான் அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில் செம்மஞ்சள் துவரை. சூரியன் உதிர்ந்த மாலையில் உரலைப் பின்னும் கயிறு பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை நெய்யும் வெண்ணையும் துழாவும் 2 தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக்...

ஆனந்த் குமார் கவிதைகள்

அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்     நிறைந்துவிட்டது. கத்தரி புதினா தக்காளி இருந்தாலும் அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம் வளர்ந்த ஒரு ரோஜாவின் கிளைமுறித்து கிளைமுறித்து வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள். இனி இடமில்லை என ஆனபின்னும் குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து அதன் கீழேயே நட்டுவைத்தாள். ஒரு தொட்டியில் இத்தனை நட்டால் ஒன்றுமே பிழைக்காது என்றதை அவள் கேட்டமாதிரியில்லை காய்ந்த ரோஜா பதியன்களுக்கு தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள் அம்மும்மா உறங்கும் மதியவேளையில் குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது பெரிய ரோஜாச்செடி அவள் எழுந்து வந்து பார்க்கிறாள் மூட்டில் கையூன்றி உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில் கண்டுபிடிக்கிறாள் இன்னுமோர் இடைவெளியை   விழித்தபின்  நகர் நடுவே அந்த ஏரியை வேலியிட்டு வைத்திருந்தார்கள். தொட்டிலுக்குள் எழுந்துவிட்ட குழந்தைபோல் கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது, அழவில்லை சமர்த்து.   கம்பித் தடையின்றி ஏரியைப் பார்க்க சுற்றி வந்தேன். சாலை தாழும் ஒரு பழைய ஓடையருகே விரல்விட்டு வெளியே மணல் அளைந்துகொண்டிருந்தது ஏரி.     மலையெனக்கருதி இருளை பாதிவரை ஏறிவிட்டேன் இடரும் எதன்தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன்.   வழியென்பது ஒன்றேதான், மேலே. விடிய நான் தொட்டது பாழ்வெளியின் பெருமூச்சு. எனக்குத் தெரியும் ஏறுவதை விட இறங்குவது கடினமென. ஆனாலும், மலையில்லாத உச்சியிலிருந்து எப்படி இறங்க?   ஆனந்த் குமார் தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.