Thursday, September 19, 2024

தினகரன் கவிதைகள்

1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் ஊடுருவும் ஒளியை சத்தமில்லாமல் அறைக்குள் அனுமதிக்கிறது சன்னல்   எழுந்து அருகில் சென்றதும் எங்கிருந்தோ வந்த...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.  நவம்பர் என்பது இரவின் உறையிலிட்டுச் சிறு ஈசலும் என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும் ஒரு தபால் பெட்டி விளம்பர பொம்மைகளின் முன் கூனிக்குறுகி நிற்க நேரிடும் கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட... 2. இழப்பின் வரலாறு நீயும்...

உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும் பிரியங்களால் மாட்டுக்கறியின் ருசியை அரூரில் சுவைக்கக் கற்றேன். ஆம்பூர்,...

கதை

'அந்தக் காலத்தில் போர்வெல் முதலாளியை மிகவும் சோதித்தன ஊற்றுகள். ஒளிரும் ஆபரணங்களோடு இயந்திர முனையில் தன்னையே பொருத்தி பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார். அவர் இறங்க இறங்க ஊற்றுகளும் பதுங்கின. விடியலில் மேலே வந்த இயந்திரத்தில் முதலாளி இல்லை. மூவாயிரம் ஆண்டுகள் கழித்து தொல் எச்சமான முதலாளியே நமக்கு நாட்டார் தெய்வமானார்' பயண...

வெள்ளை நிறக்காலம்.

நோயின் வாசலில் நின்று அல்லது கதவின் மறு புறம் நின்று அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள் பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள் அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள். பீடித்திருந்த நோய்மையோ...

செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...

இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...

பா.திருச்செந்தாழை கவிதைகள்.

ரகசியங்களற்றவனின் நிழலில் கண்ணாடி வளர்கிறது. எப்படியாயினும், இதற்கு ரகசியமெனப் பெயரிட நான் இன்னொருவருக்கும் இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது. ரகசியங்கள் பெறுமதியானவை என்பதிலிருந்து வெளியேறிவிட்ட என் புதுவயதில் நான் சிறிய காற்றாடிகளை நீண்ட தொலைவில் செலுத்தும் ஞானம் பெற்றேன். எல்லாவற்றிலிருக்கும் ரகசியங்களை என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது. அங்கே குருதியற்ற ஓருடல்...

உப்பளத்து கால்கள்

அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த கடலை விட பெரிதாக இந்த கற்களை விட உறுதியாக சமயங்களில் அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை உற்பத்தி செய்கின்றாள் அவள் தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள் அவளின் உதடுகள் வெடித்த பனிப்பாறையை நினைவூட்டுகின்றன அயற்சியால் தன்னிச்சையாக நாக்கு ஈரமாக்கிட பற்கள்...

தேவதேவன் கவிதைகள்

அபிநயம் அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை? இளைப்பாறல் போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில். ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்? கடவுளும் சாத்தானும் அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய...