கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.
1.
வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன.
காதுகளில்
வண்டொன்று சத்தமிடுகிறது.காலங்கள்
கலைந்து தோன்றுகின்றன.கண்கள்
நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன.மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும்
சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது.அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி
கள்மனம்.மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய
உடல்.இடைவெளிகளை உடைத்து விடுகின்ற
காலம்.
கற்பனைகளை அள்ளிய கைகள்...
நேசமித்ரன் கவிதைகள்
சீசாச் சில்லுகள்சக்கர நாற்காலியொன்று நகரத்தின் மழைக்கும்
சாலையை தன்னந்தனியாக கடந்து வீடு சேர்வதாய்
ஓர் மன்னிப்பு
திமிரின் சீசாச்சில்லுகள் பதித்த சுவர்களை
பூனையின் பாதங்களுடன் கடந்து
உன் அழும் முகம் அருகே நிற்கிறதுகண்ணாடிக் கூம்புக்குள் எரியும் சுடர்
மிக நெருங்கின மூச்சுக்கு...
ச.துரை கவிதைகள்
ஏனெனில்கைகள் தேயிலை தோட்டத்திற்கு
குத்தகைவிடப்பட்டதும்
சிலந்திகளோடு உறங்கி
எச்சில் கோப்பைகளை கழுவுவேன்
என்னிடம் அறுபது மணிநேரம்
இயங்ககூடிய போதை வஸ்து
இருந்தாக நம்பினார்கள்
தோட்டத்திலிருக்கு சூளைக்கு மாற்றப்பட்டதும் எனது கைகள்
வெட்டப்பட்டு வேறு கைகள் பொருத்தப்பட்டன
யார் இந்த அந்நியனென்று கேட்ககூடாது
என் உடையென்று கதறகூடாது
கொஞ்சமும் பொருத்தமற்ற
உணவுக்காக சட்டங்களில் மணல்களை
நிரப்பி...
பாலை – பொதுத் திணையின் அவலம்.
1.அதிகரிக்கும் சிறுபொழுது.
காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை
நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள்
சுமை மனிதனாக இருக்கும் தலைவன்
லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம்
குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான்
எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை
இங்கு,...
காணாமல் போவது எத்தனை வசீகரமானது.
தினம் தினம்எத்தனையோ பேர்காணாமல் போகிறார்கள்குழந்தைகள்முதியவர்கள்பெண்கள்மனநிலை சரியில்லாதவர்கள்.காணவில்லை விளம்பரங்கள்செய்தித்தாள்களில்தொடர்ந்துவருகின்றன. அவள் மட்டும்தொலைவதே இல்லைஎங்கு போனாலும்வழி தெரிந்து விடுவதுகொடுந் துயரம்.காணாமல் போகக்கூடஆணாக வேண்டும் தொலைவதற்கு முன்பானமுன்னேற்பாடுகளின் பட்டியல்நெடுஞ்சிகை மழித்தல்காயம் முற்றும் மூடும் காவிருத்ராட்ச மாலைதிருவோடுஅணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கைஏதோவொரு...
முத்துராசா குமார் கவிதைகள்
எச்சித்தட்டு
புதையலாகத் தென்பட்டது
தட்டில் பொறித்தப் பெயர்.
வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை.
இரவில் எப்படியும் அபகரித்துவிட
புதையலுக்கு மேலே
வனம் செய்து
நீர் தேக்கினேன்.
வனம் அழித்து வறட்சியாக்கியும்
புதையலைப் பெயர்க்க முடியவில்லை.
மூன்று வேளைத் தோல்விகள் தாளாது
பெயருடைய ஆளையே
விழுங்க எழுந்தேன்.
சுவரில் தொங்கும்
கண்ணாடிச் சட்டகத்துக்குள்
சேரில் அமர்ந்திருந்தார்...
பா.திருச்செந்தாழை கவிதைகள்.
ரகசியங்களற்றவனின்
நிழலில்
கண்ணாடி வளர்கிறது.எப்படியாயினும்,
இதற்கு ரகசியமெனப் பெயரிட
நான் இன்னொருவருக்கும்
இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.ரகசியங்கள் பெறுமதியானவை
என்பதிலிருந்து
வெளியேறிவிட்ட என் புதுவயதில்
நான் சிறிய காற்றாடிகளை
நீண்ட தொலைவில் செலுத்தும்
ஞானம் பெற்றேன்.எல்லாவற்றிலிருக்கும்
ரகசியங்களை
என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது.
அங்கே குருதியற்ற ஓருடல்...
உதிரும் கணத்தின் மகரந்தம்.
சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து
பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின்
வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது
பொக்லைன் இயந்திரம்அரைகுறை ஆடைகளோடு
தாதியின் தடிக்குப்பின்னிருந்து
அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய்
ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்ததுஒவ்வொருமுறையும்
இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து
சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள்
அகப்படும்படியானதுஏழு ஆண்டுகளுக்கு...