சாகிப்கிரான் கவிதைகள்

கவி நிரம்பியிருந்தது அறை. எவ்வளவு புரட்டியும் அந்த நோட்டில் ஏதுமெழுதாத பழுப்பை உற்றுப் பார்த்தான் சுவரின் ஓவியத்துள் ஒளிந்திருந்து அவன் சிரித்ததை ஒரு கணம் திரும்பி மீண்ட இவன். ஏதுமற்றது வெளி. பதில் நீதானே, உன் பெயர்தானே என்றான். ஊமையாக, செவிடாக இருந்தேன். நன்றாக குலுக்கிய ஒரு பாட்டில் போலாகாதிருக்க முயன்றேன். நான் ஒரு...

அழுகைக்கு மார்பை திருப்புதல்

இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும்...

குரு

சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம், இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம் சுர குருவுக்கோ சரியான கண்ணாம். ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம். பதினஞ்சு மாசி பகல் துயின்றது. வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி பானு மறைந்தான்....

வாராணசி கவிதைகள்

  காலம்         இங்கே   காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று  காலங்களுக்கு அப்பாலான  காலம்    இங்கே   இன்று பிறந்த இன்றும்  நாளை பிறக்கும் நாளையும்  பிறந்ததுமே   இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன    இங்கே   அன்றாடம் உதிக்கும் சூரியன்  முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது  முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது    இங்கே  காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்  யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்  மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.    இங்கே   ஒசிந்து...

அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ் என நீ உச்சரிக்கும்போதெல்லாம்  இருவாட்சியின் பெரும்பாத நிழல் என் மேல் கவியும் உன் நாக்கு  மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி  பற்களில் பட்டு  உதடுகளைக் குவிக்கும்போது  பனி பிளந்து இலை குளிர்ந்து  காற்று தணியும்  மழைப் பெய்து ஓய்ந்த கடலின்  நீலம் பாய்ந்த உன் முகத்தில்   அச்சொல் பூரணமடையும் போது பிறை தோன்றும் பின் மறையும் இடையில் விரியும் துண்டு வானம்  எனக்கும் உனக்கும் மட்டுமே. ———————————————— பூப்பனி  பெய்யும் ஒரு...

கம்மா > மடைகள் > வாமடை

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும்  சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது  குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான  கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய் கருவுக்குள் நானிருக்கையில் பால்சோறு பிசையும்  கிண்ணத்தின் அளவே...

நீலவ்னா

என் கனவு பிரதிமை நீலவ்னா தொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள்  இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம் ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம் பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது வான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை  இப்போழ்து பார்க்க வேண்டுமே நீ மகா அற்புதம்  நட்சத்திரக் கூட்டு மந்தையில்  தனித்து ஔிரும்...

டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்

1. உழவரே! உழவரே!  விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும்  தானியம் போல   பற்களை  மாற்றி இருக்கிறேன்  உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால் முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள்  உழவர், அவளைப் பார்த்தவாரே "ச்சோ! ச்சோ" என  காற்றில்...

தூரிகை

இந்த பட்டாம்பூச்சி வாழ்வை  எவ்வாறு ரசிக்கின்றது  காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன  வானிலிருந்த விழுந்த மழைத்துளி  சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்  தவத்தினை கலைத்துவிட்டது  பசிய காட்டில்  திரியும் பட்டாம்பூச்சிகள்  மனிதர்களையே பார்த்திருக்காது  பச்சை போர்த்திய இவ்வுலகம்  பட்டாம்பூச்சிகளுக்கானது  கடவுள் தனது  தூரிகை வண்ணங்களால்  பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்  மனிதன் சுதந்திரத்தின்  ஆனந்தத்தை அனுபவிக்க  பட்டாம்பூச்சியாகத்தான்  பிறவியெடுக்க வேண்டும்!   ப.மதியழகன் 

ஸ்ரீவள்ளி கவிதைகள்

சிலவற்றைச் சரி செய்ய முடியாது திடீரென ஒரு நாள் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மறைந்துவிடுகின்றன அப்படியொரு நாளுக்குப்பின் மீண்டும் சூரியன் முளைக்கிறது சந்திரன் முளைக்கிறது நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன ஆனால் இது பழகிய வானமல்ல தலைக்கு மேல் பெரிய படுதா இதன் அடியில் ஒரு மரத்தில் தூக்குமாட்டிக்கொள்ளக்கூட முடியாது.   தன்னோடிருத்தல் தன்னந்தனிமையில் ஒரு வீணை...