பத்மபாரதி கவிதைகள்
வழித்துணை
அனாந்தர ஊஞ்சலிலிருந்து
தவறி விழுந்து ஓவென்று
அழுகிற அவள் சின்னஞ்சிறுமி
எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும்
செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில்
வலி கரைந்தே போகிறது
சதா கோபிக்கும் அப்பா
தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி
அப்படி ரகசியங்களால்
வளரும் சிறுமியின் பின்னலிடையில்
அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து
பச்சை மாறாது...
ராஜ வீதி
வகைமை: <சிறுகதை>
வார்த்தை எண்ணிக்கை: <5089>
வாசிக்கும் நேரம்: <25> நிமிடங்கள்
1.
அந்த வீதியில் நுழைந்ததுமே ஒரு புராதனத்தை உணர முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. அந்த ‘கார்’ அப்போது ‘எல் கெமினோ ரியல்’ சாலையில் போய்க்...
சூழலியம்: தத்துவ – உளவியல் அடிப்படைகள் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம்
நாம் நம்புவதை விட இயற்கையிடம்
வேறொன்று இருக்கிறது
அதனிடம் ஆன்மா இருக்கிறது
அதனிடம் சுதந்திரம் இருக்கிறது
அதனிடம் காதல் இருக்கிறது
அதனிடம் மொழி இருக்கிறது
- ஃப்யொடர் இவானுவெச் சுச்செவ் (Fyodor Ivanovich Tyutchev)
உயிர் ஏணி (ladder of being) என்று...
பொட்டி
இரயில் மூன்று மணி நேரம் தாமதமாக நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பத்தைந்து நிமிடத்திற்கு வந்து சேர்ந்தது. நடைமேடையில் முருகேசு இறங்கியதும் பார்வையை நீள விட்டார். அவர் பெட்டிக்கு முன்னிருந்த வேறு பெட்டிகளில் இருந்து...
கட்டக்கால் வேட்டை
தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து,
முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன்.
கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது.
தலைக்கு வீசிய ஐந்தாறு
வெங்காய வெடிகளுக்கும்
பாய்ச்சல் குறையவில்லை.
பின்னால் கேட்கும்
குட்டிகளின் அலறலுக்கு
வெறிவீறிட திரும்பிய பன்றி
எனை மல்லாத்திவிட்டு
ஈரிரண்டு...
இன்பா கவிதைகள்
1)நாடு மாறி நான்
சிவப்புக் காதோலை
கருப்பு வளையல்
ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்
களக்கக் கட்டிய பூச்சரங்களென
பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்
காவிரிக்கரையில்
முழு ஆடையோடு முழுகி
வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு
கரையேறும் கட்டுக்கழுத்திகள்
படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி
மஞ்சள் தோய்த்தச் சரடைக்
கழுத்தில் கட்டி முடித்தபின்
முகூர்த்த மாலைகள் ஆற்றில்...
புதைமணல்
‘ஸ்கூட்டரில் செல்பவனை இதற்கு முன் பார்த்ததில்லை, இனியும் பார்க்கப் போவதில்லை”
“கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பையன் தினமும் இந்த நேரத்தில் தான் தெருவைக் கடந்து செல்பவனாக இருக்க வேண்டும். ஆனால் இவனை அடிக்கடி...
ஆனந்த் குமார் கவிதைகள்
அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்
நிறைந்துவிட்டது.
கத்தரி புதினா தக்காளி இருந்தாலும்
அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம்
வளர்ந்த ஒரு ரோஜாவின்
கிளைமுறித்து கிளைமுறித்து
வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள்.
இனி இடமில்லை என ஆனபின்னும்
குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து
அதன் கீழேயே நட்டுவைத்தாள்.
ஒரு தொட்டியில் இத்தனை நட்டால்
ஒன்றுமே பிழைக்காது என்றதை
அவள் கேட்டமாதிரியில்லை
காய்ந்த ரோஜா பதியன்களுக்கு
தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள்
அம்மும்மா உறங்கும் மதியவேளையில்
குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது
பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது
பெரிய ரோஜாச்செடி
அவள் எழுந்து வந்து பார்க்கிறாள்
மூட்டில் கையூன்றி
உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில்
கண்டுபிடிக்கிறாள்
இன்னுமோர் இடைவெளியை
விழித்தபின்
நகர் நடுவே
அந்த ஏரியை
வேலியிட்டு வைத்திருந்தார்கள்.
தொட்டிலுக்குள்
எழுந்துவிட்ட குழந்தைபோல்
கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது,
அழவில்லை சமர்த்து.
கம்பித் தடையின்றி
ஏரியைப் பார்க்க
சுற்றி வந்தேன்.
சாலை தாழும்
ஒரு பழைய
ஓடையருகே
விரல்விட்டு வெளியே
மணல் அளைந்துகொண்டிருந்தது
ஏரி.
மலையெனக்கருதி இருளை
பாதிவரை ஏறிவிட்டேன்
இடரும் எதன்தலையிலும்
அழுந்த மிதித்தே
வந்திருக்கிறேன்.
வழியென்பது ஒன்றேதான்,
மேலே.
விடிய நான் தொட்டது
பாழ்வெளியின் பெருமூச்சு.
எனக்குத் தெரியும்
ஏறுவதை விட இறங்குவது
கடினமென.
ஆனாலும்,
மலையில்லாத உச்சியிலிருந்து
எப்படி இறங்க?
ஆனந்த் குமார்
தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.
தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்
வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும்...
அடைக்கும் தாழ்: அன்பை அடைத்து வைக்கும் சொல்
‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ (2004), ‘மனாமியங்கள்’ (2016) நாவலைத் தொடர்ந்து சல்மா எழுதியுள்ள மூன்றாவது நாவல் ‘அடைக்கும் தாழ்’ (2022). தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை எழுதத் தொடங்கியவர் சல்மா. இவரது ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ (2000) என்ற கவிதைத்...















