படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 4

செத்த காலேஜும் உயிர் காலேஜும் கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே சாரும், இன்று உலகத்திலேயே அதிக...

வானத்தை வரைந்த சிறகு

      அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்த வெங்கடேசன், புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல… காம்பவுண்டுக்கு வெளியே மஞ்சள் நிறத்தில் மடல் விரித்திருந்த வாழைக் குருத்தை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென...

இடிந்த வானம்

“வானம் ஒரு நீலக்குடை. நம் கூடவே வரும். ஆனால் மாறும். என்ன, அதன் பிடி தான் நம்மிடம் இல்லை. நாம் எந்த பக்கமும் நகர்ந்து பாக்கலாம். அப்படி நகர்ந்து அண்ணாந்து மேலே பார்த்தால்...

பேதமுற்ற போதினிலே -9

யாதும் ஊரே தொலைக்காட்சியை நான் வெறுக்கிறேன். பேர்பாதி காரணம் நிகழ்ச்சிகள் என்றால் இன்னொரு பாதி விளம்பரங்கள். தொலைக்காட்சியை முட்டாள் பெட்டி என்று சொல்வது தவறு. முட்டாள்களுக்கான பெட்டி என்றுதான் சொல்லவேண்டும். ஒரே விளம்பரத்தைத் திரும்பத்...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்  இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து  வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென   கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது  மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை  அது பாம்புகளென நினைத்துக்கொள்ள  இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக  அமர்த்தி அமர்த்தி...

நகுலனின் வளர்ப்புக் கிளிகள்

1] நகுலன் வீட்டில் தரை வீழும் கண்ணாடிக் கோப்பைகள் உடைந்து நொறுங்குவதில்லை. 2] நகுலன் வீட்டில் யாருமில்லை. பூனைகள் பாதயாத்திரை போய்விட்டன. 3] நாலங்குலம் பாசம் காட்டும் மனிதர்களைவிட நாய்கள் மேல் என்பது நகுலன் வாக்கு. 4] மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில் கவிதை காணாமல் போய்விட்டிருந்தது. 5] புறவாசல் வரை வரும் சுசீலா நகுலன் வீடேகுவதில்லை. விந்தைதான் ரோகிகள் சூழ்...

நீரை. மகேந்திரன் கவிதைகள்

1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியை அந்த வரிசையில், பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன் இருபது என்று சொல்லலாம் இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும். முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும். இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும் காலைக்கடனுக்கான அவசரம். மூன்றாவதாக நிற்பவன் கே.எப்.சி கவுண்டருக்கு...

அதிரூபன் கவிதைகள்

1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி காட்டைத் திரிக்க பெரிய...

கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும்

லாயர் ஆறுமுகத்தின் அலுவலகத்திற்குள் கயல் நின்று கொண்டிருந்தாள். காலையில் லாயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு இங்கே வந்து விட்டாள்.  மதிய உணவிற்கு அரிசி ஊற வைத்திருந்தாள். வாழைத்...

எங்கட

   ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து...