படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

கஸல்

                     ஈர விறகிலிருந்து எழும் புகைபோல                    ...

மீண்டும் நீளும் தேவதையின் கைகள்

          கண் விழித்தேன். இனிய புன்னகையோடு முன்னே தேவதை நின்றாள். கைகளை நீட்டினாள், அப்போது நான் நிலத்தில் கிடந்தேன்.  பெரும் காற்று சுழன்று அனைத்தையும் தன்னுள் அடக்கி உயர்ந்தது....

எரியும் கிடங்குகள் – திரைப்படம் ஒரு பார்வை

Barn Burning – சிறுகதையைத் தழுவி Burning திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருப்பதையும், அதே சமயம் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாததாக இருப்பதையும் உணர முடியும். psychological mystery drama என்ற வகைமையில்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 5

5.தீராத்தழும்புகள். குழந்தைகளைப் பற்றிப் பேசும் திரை இலக்கியம் நுணுக்கமான தளத்தில் நிகழ்பவை. அவை குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டுமே சுருங்கிவிடுமே ஆயின் இலக்கியமாகா. குழந்தைகளின் தடங்களுக்குள் பொருந்தக் கூடிய மானுடனின் மனப்பாதங்கள் உண்டு. அப்பாதத்தைக் கற்பனையில்...

முத்தம்

ச் முருகேசு அவனது வழக்கமான இடத்திற்கு வந்து காத்திருந்தான். நடுவில் ஊஞ்சமரம் ஒன்றைக் கொண்ட சிறுபுதர் அது. சங்கமுள் செடி ஒன்று அடர்ந்த இலைகளோடு வளர்ந்து மரத்தின் கழுத்துவரை மூடியிருந்தது. அதன்மேல் கோவைக்கொடிகள் ஏறியிருந்தன....

ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்

பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல்...

யோகம்

வெகுநாட்களுக்குப் பிறகு நாம்பள்ளி ரயில் நிலையத்தில் அனந்தன் சாமியைப் பார்த்தேன். சாமிதானா? சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து உற்றுப் பார்த்தேன். மழிக்கப்பட்ட தலையில் முட்களைப்போல் நரைமுடி. அடர்த்தியான தாடி....

தேவதேவன் கவிதைகள்

பெருவெளியில் தரையும் கூரையும் நான்கு சுவர்களுமில்லாத பெருவெளியில் அழிந்துபோகக்கூடிய தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஆங்கே தவழ்வதோ அழியாப் பெருவெளியைத் தாயகமாகக் கொண்டதாம் அன்பு கருணை அறம் மெய்மை என ஒளிரும் தேவதைகள்! சின்னஞ் சிறிய மலர் குத்தவைத்துக் குனிந்து பார்க்கவைத்தது...

ஸ்ரீநேசன் கவிதைகள்

சூரியனுடன் வருவேன் நான் இங்கிருப்பேன் இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன் மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...

உமா மகேஸ்வரி கவிதைகள்

சூரியன் ஒளிரும் திரைகள் வாகன கீதம் நொறுங்கிய வளர் பிறை பத்திரமாயிருக்கிறது மல்லிகைச் சரத்தருகே இருள் தித்திக்கும் மரங்கள் சோம்பல் முறிக்கும் காலை அங்கே ஏனோ பூக்காத மஞ்சள் மலர்கள் இங்கே எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில் சிராய்தததோ ஒரு  சொல் சிலாம்பு துடைத்தும் போகாதது. இம் முறை ஒரே...