நான் உன்னைக் காதலித்த போதும்…
“அதோ அவர் இருக்கிறார். எனது இதயத்தை வெளிக்காட்ட உகந்த நாள் இதுவாகும்”, என அஞ்சலி தனக்குத் தானே சொல்லி மகிழ்ந்தாள். வான் முகில்கள் மீது தான் மிதப்பது போல அவள் உணர்ந்தாள்.
அடர்ந்த கருமையான...
மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...
நெமேஷியா
என் பெரியம்மா மகள் நெமேஷியாவுடன் அவரை வயற் பரப்பில் நான் நின்றுக்கொண்டிருக்கும் என்னுடைய புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதன் பின்னால் என் அம்மாவின் கையால் ‘நெமேஷியா மற்றும் மரியா, தாஹ்ஜிக்யூ, 1929’ என்று பென்சிலில்...
சுனிதா நாராயண்: நமது பூகோளத்தைக் காப்பாற்ற பத்து வழிகளொன்றும் இல்லை
காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான் என்கிறார் 2020-க்கான எடின்பர்க் பதக்கத்தை வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் சுனிதா நாராயண்.
சுற்றுச்சூழல் குறித்த உணர்வை எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்காக சுனிதா...
இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா
நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...
வார்சன் ஷையர் கவிதைகள்
நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவே
அவர்கள் என் அத்தையின் வீட்டைத் தீ மூட்டினார்கள்
தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில்
ஒரு ஐந்து பவுண்ட் தாள் போல
குறுக்கே மடிந்து நான் அழுதேன்.
என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...
படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்
ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு...
லூயிஸ் க்ளக் கவிதைகள்
1,ஏதுமின்மையின் தனிமை
இருள் நிறைந்திருக்கிறது
மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை
இங்கு ஒரே மழை சத்தம்
அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது
மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது
இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை
காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது
எல்லா காலையிலும் அது
கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது
பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது
ஆனால்...
அவளுடைய காதலன்
எனக்கு அறிமுகமான ஒருவர், ஒருமுறை என்னிடம் கூறிய கதை இது:
மாஸ்கோவில், நான் மாணவனாக இருந்தபோது, ஒரு பெண் வசித்துவந்த அறைக்கு அருகாமையில் வசிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவப்பெயர் பெற்ற பெண்களில் ஒருத்தியாக...
வேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் – கா.சரவணன்
டைபாயிடு காய்ச்சலால் அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தபின் நான் சந்திக்கும் இலையுதிர் காலம் அது. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வெளியே வந்தபோது என்னுடைய தோற்றம் பார்ப்பதற்குப் பலவீனமாகவும் தள்ளாட்டத்துடனும் இருந்தது. வேலை...