மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

சீனப்பெட்டிகளும் பொம்மை அரங்கங்களும்

பிரக்ஞையுணர்வே நமக்கு தெரிந்தவற்றின் ஒரே இல்லம். -டிக்கின்சன்    எமிலி டிக்கின்சனின் கவிதைகளை குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள். பெட்டிகளை உள்ளடக்கிய பெட்டியின் படிமம்...

பால்தசாரின் அற்புதப் பிற்பகல்

பால்தசாரின் அற்புதப் பிற்பகல் (Balthazar`s Marvelous Afternoon) ஸ்பானியம்: காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (Gabriel Garcia Marquez) ஆங்கிலம் : ஜே.எஸ். பர்ன்ஸ்டீன் (J.S.Bernstein) தமிழில் : ச.ஆறுமுகம். கூண்டு செய்தாகிவிட்டது. ஆண்டாண்டுப் பழக்கத்தை விட்டுவிடமுடியாமல், பால்தசார் அதை...

கடவுளைப் போல யார்?

எழுதியவர்: அக்வைக்கே எமெஸி தமிழில்: லதா அருணாச்சலம் அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல,  ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...

ஜோஸ் சரமாகோ நேர்காணல்

கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso) தமிழில் ச. ஆறுமுகம்   பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல்...

குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்

எழுதியவர்:– இடாலோ கால்வினோ  தமிழில்: பிரவீண் பஃறுளி நான் நடைபாதையிலிருந்து  கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே  நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன்....

குதிரை மீது வில்லியம் ஃபோல்க்னர்

மூலம்: ஹாவியேர் மரியாஸ் தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ் கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே வாரத்தில், நிலக்கரி சுரங்கத்தினுள்ளே இரவு ...

யான் காப்லின்ஸ்கி கவிதைகள்

மொழி பெயர்ப்பு :வே.நி.சூர்யா 1 எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி; சிலசமயங்களில் சாதாரணமாய் நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக: புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி, களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி, மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி; எல்ம் மரக்கிளையை இடையறாது வட்டமடிக்கிறது ஒரு வெளுத்த அந்துப்பூச்சி; அம்மரக்கிளையோ புலப்படாதவாறு இன்னும் அசைந்துகொண்டிருக்கிறது...