கட்டுரைகள்

தி. ஜா. என்கிற ஜானகிராமன் மாமா

ஒரு வாசகனாகப் பலரைப்போல் நான் தி. ஜா வை அறிந்தது என் இருபதுகளில். ‘சாவி’ பத்திரிகை புதிதாக வந்தபோது அதில் தி. ஜாவின் ‘அம்மா வந்தாள்’ பிரசுரம் செய்தார்கள். அதைப் படித்து அதிர்ந்து...

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்

உலகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை...

சிசு விவசாயம்-காயத்ரி மஹதி

"மனிதன் மீதான நம்பிக்கையைக் கடவுள் கைவிடவில்லை என்பதற்கான ஆதாரம் தான் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு" -மகாகவி தாகூர். அம்மாவைக் கொண்டாடும் சமூகமாக நாம் மாறுவதற்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்வதென்றால் இங்கு உள்ள...

நகுலனின் பலமுகங்கள்

நகுலனை விட அவருடைய ராமசந்திரனும், நவீனனும், சுசிலாவும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டு விட்டார்கள். சும்மா பம்மாத்து பண்ணுகிறார் என்பதில் இருந்து, உன்மத்த நிலையின் உச்சம் இவர் எழுத்து என்பது வரை...

சித்திரக்கதை நினைவுகள்

“என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற  அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது. அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும். வீட்டில் ஓசியில் வந்த நாவல்கள்.....

வானிலிருந்து சிதறி உதிர்ந்த செர்ரி மலர்கள்

முகடுகள் கோடிட்ட நிலம், துல்லிய நீலத்தில் மின்னும் கடற்பரப்பு, அதை நோக்கி விரிந்த பசிய வயல்கள் இவையெல்லாம் இரண்டாயிரம் அடி உயரத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தன. அடுத்து இந்தத் தொகுதியின் தலைமை விமானியான எனது...

தலையங்கம்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 இன்னும் பிறக்காத தலைமுறைக்காக… 1 இன்றைக்கு மனிதகுலம் அதன் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் நிற்கிறது. புவியில் அனைத்து உயிர்களின் பாதுகாக்கப்பட்ட...

மையநீரோட்ட  தமிழ் சினிமாவும் டு லெட் எனும் தெள்ளிய நீரோடையும்

 (Jumpcut 59/2019 இணைய இதழில் வெளிவந்த இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: வெளி ரங்கராஜன்.) தமிழ் சினிமாவின் மாற்றுவெளிக்கான முயற்சிகளின் குறுவரலாறு: 1970 களில் மலையாளம் அல்லது கன்னட மொழி திரைப்படங்களைப் போல் தமிழில் கலைப்படம்...

முதற்கனலின் பிதாமகன்

இருபத்தியாறாயிரம் பக்கங்கள் இருபத்தியாறு தொடர் நாவல்கள் என ஏழு வருடங்கள் தொடர்ந்து எழுதி மகாபாரதத்தின் மறு ஆக்கமான "வெண்முரசு" எனும் நவீன காவியத்தைப் படைத்து தமிழ் இலக்கியத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பெருமை...

பல்லக்கும் சமூக அநீதியும் …

இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம், எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன். தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார். பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக...