படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”

அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள்...

அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை, அசைந்து கொடுக்காத வல்லரசு..!

உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம்...

கனலி 15வது இணைய இதழ்.

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், கனலி-யின் 15வது இணைய இதழ் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.15வது இதழ் என்பதை ஒரு முக்கியமான இதழாகத் தான் பார்க்கிறேன். காரணம் தீவிர இலக்கியச் செயல்பாடுகள் என்பதன் மீதான வெகு மதிப்புகள்...

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ [கண்ணீரைப் பின்தொடர்தல்]

நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன....

கவிதை: அன்று முதல் இன்று வரை

யவனிகா ஸ்ரீராம்: இவரது கவிதைகளைப் படித்து வருகிறபோது, என்னால் சர்ரியலிஸ ஓவியங்களை நினைக்காமலிருக்க முடியவில்லை. சினிமாவில் மாண்டேஜ் என்ற காட்சியமைப்புகள் உண்டு. ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றும் காட்சிகளைத் தொகுத்தால் இறுதியில் ஒரு பொருள்...

கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

புனை பெயர்: பி. கேசவ தேவ் இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். மார்க்சீய சிந்தனையாளர். சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவை: ‘பிரதிக்ஞை’, ‘நிக்ஷேபம்’, ‘கொடுங்காற்று’ முதலியவையாகும். நாவல்களில் ‘ஓடையில் நின்னு’,...

ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை

ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின்  படைப்புகளின் தீவிரத்தன்மையில் உள்ள வேறுபாடுகள் 50 ஆண்டுகால...

சித்தலிங்கையா: நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை

11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர்,...

தேவதேவன் கவிதைகள்.

அமைதியான அந்தக் காலைநடையில் அவர் சென்றுகொண்டிருந்தார் எல்லாம் முடிந்துவிட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்!   இதுதான் இதுதான் அந்தச்செயல் என்பதுபோல்!   மிகச்சரியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்!   அந்தக் காலையையும் அந்தப் பாதையையுமே தாண்டி அந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்! இவைபோலும்   எந்தச் சொற்களாலுமே தீண்ட முடியாதவர்போல்!   எங்கிருந்து வருகின்றன எங்கிருந்து வருகின்றன விளையாடும் குழந்தைகளின் இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்?   இப்பேரண்டத்தின் ஒத்திசைவிலிருந்துவரும் பேரிசையின்...

மையநீரோட்ட  தமிழ் சினிமாவும் டு லெட் எனும் தெள்ளிய நீரோடையும்

 (Jumpcut 59/2019 இணைய இதழில் வெளிவந்த இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: வெளி ரங்கராஜன்.) தமிழ் சினிமாவின் மாற்றுவெளிக்கான முயற்சிகளின் குறுவரலாறு: 1970 களில் மலையாளம் அல்லது கன்னட மொழி திரைப்படங்களைப் போல் தமிழில் கலைப்படம்...