படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

சீனு

  மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பிய போது முதலாவது ஜீவனாக வாசலில் நின்றுகொண்டிருந்தது சீனுதான். என்னைப் பார்த்ததும் அத்தனை உற்சாகம் அதன் முகத்தில். கழுத்து வரை பாய்ந்து பாய்ந்து உடல் பூராவும் தன்...

செர்ரி ஃப்ளாசம்

வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த...

சுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” நாம் வெளிப்படும் தருணம்

வாசகனோடு உரையாடலொன்றை நிகழ்த்தவோ படைப்புடன் அந்தரங்கமாக நம்மை உணரச் செய்யவோ தலையணைத் தண்டி நாவல்கள்தான் தேவையென்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. தேவையென்னவோ கூர்ந்த அவதானிப்பும், கரிசனமும், முதிர்வும் வாய்க்கப்பெற்ற எழுத்தாளனின் படைப்பும், அதை...

ஆதவனின் படைப்புலகம்

தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்தில், வெகு தற்செயலாகத்தான் ஆதவனின் மரணச்செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஆதவனின் இரண்டு நாவல்களையும், அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும், புழுதியில் வீணை என்ற நாடகத்தையும் படித்துப் பிரமித்திருந்த வாசகனுக்கு...

ரஜ்ம்

  தரையில் மல்லாந்து படுத்துக்கிடக்கிறேன். மரணம் ஒரு அரசியைப் போல் ஒவ்வொரு படிக்கட்டாக மெல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருக்கின்றது. காதிலிருந்து வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் தரையில் பரப்பியிருக்கும் பழுப்பு நிற கிரவல் மண்ணுடன்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -1

இருபத்தோராம் நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களில் தெரிகின்ற தனித்துவமான அம்சங்களை முன்வைத்து படங்களை அறிமுகம் செய்து பேசும் தொடர். ஒரு குறிப்பிட்ட சாரத்தைப் பேசும் ஒரு அத்தியாயத்தில் ஐந்து படங்கள் அறிமுகம் செய்யப்படும். முதல் ஐந்து...

திருடன் மணியன்பிள்ளை – வாசிப்பனுபவம்

உலகம் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவரவர் பார்வையில் ஒவ்வொன்றாய் இருக்கிறது . உலகம் நல்லதா? கெட்டதா? இது காலங்காலமாய் இருந்து வருகிற கேள்வி. இதற்கான பதிலும் அப்படியே.  இந்த...

பேதமுற்ற போதினிலே – 5

உணர்தலும் அறிதலும் Sense & Sensitive இரண்டுக்கும் மூலம் இலத்தீன் மொழியின் sentire (feel) என்ற சொல்லாகும். Sensitive என்ற வார்த்தைக்கு அர்த்தம், புறக்காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுதல், உணர்திறன், உணர்ச்சிகரமான, கூருணர்வு என கதம்பமான...

நீயாகப்படரும் முற்றம்

விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான் கூட்டக் கூட்ட இலைப்பச்சையாகி வளர்கிறது! யாரோ வெயிலைப் பிய்த்து துண்டு...

முத்துராசா குமார் கவிதைகள்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர்...