படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

அறிதலின் பயணம்  

   மனிதன் கவிதையைத் தேடிப் போவதற்கும் கவிதை மனிதனைத் தேடித் தீண்டுவதற்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை இருக்கிறது. கவிதை மனிதனைத் தீண்டுவது வேதனை; மனிதனுக்கு. முதலில் மெதுவாக, மங்கலாக, மிகவும் மங்கலாக; பின் மெல்ல மெல்ல,...

சிதைவுறும் காமத்தின் எல்லைகள் 

  இயற்கையைத் தனக்கேற்றவாறு செதுக்கிக் கொள்ள இயலும் மானுடனாகப் பிறப்பதில் தான் எத்தனை சௌகரியம்! நம்முடன் இணைந்து வாழும் சகஉயிர்களின் மனநிலையைப் பற்றி கவலைகொள்ள வேண்டியிருப்பதில்லை. படர்ந்து பரவும் செடிகளைத் தொட்டிக்குள் அடக்கி வளரவேண்டிய...

பேதமுற்ற போதினிலே-3

உள்ளும், வெளியும் பிரபஞ்சம் இரண்டாக இருக்கிறது, அகம் புறம் என்று. இத்தனை பிரம்மாண்டமான முடிவிலா வெளி ஒருபக்கமென்றால், உடலுக்குள் இருக்கும் சூட்சுமமான உணர்வுகள், மனம், புத்தி, ஆன்மா குறித்தும் நம்மால் அறியமுடியாத புதிராயிருக்கிறது. ஆனாலும்...

கதை

'அந்தக் காலத்தில் போர்வெல் முதலாளியை மிகவும் சோதித்தன ஊற்றுகள். ஒளிரும் ஆபரணங்களோடு இயந்திர முனையில் தன்னையே பொருத்தி பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார். அவர் இறங்க இறங்க ஊற்றுகளும் பதுங்கின. விடியலில் மேலே வந்த இயந்திரத்தில் முதலாளி இல்லை. மூவாயிரம் ஆண்டுகள் கழித்து தொல் எச்சமான முதலாளியே நமக்கு நாட்டார் தெய்வமானார்' பயண...

சித்திரக்கதை நினைவுகள்

“என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற  அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது. அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும். வீட்டில் ஓசியில் வந்த நாவல்கள்.....

உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும் பிரியங்களால் மாட்டுக்கறியின் ருசியை அரூரில் சுவைக்கக் கற்றேன். ஆம்பூர்,...

வெள்ளை நிறக்காலம்.

நோயின் வாசலில் நின்று அல்லது கதவின் மறு புறம் நின்று அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள் பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள் அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள். பீடித்திருந்த நோய்மையோ...

பா.ராஜா கவிதைகள்

1)இதய வடிவ பலூன். வெறுங்காலுடன் மலையுச்சியை அடைந்தது சிரமம் தான் என்றாலும் உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன் கையிலிருந்ததால் பெரிதாய் ஏதும் அயற்சியில்லை அல்லது அது கூட இங்கு தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய் கற்பனை செய்துப் பார்க்கலாம் இதயத்தையும் கிட்டத்தட்ட அந்த பலூனைப்போல பரிசளிக்க நினைத்தால் அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது. 2)கடகம். உலக புன்னகை தினம் என்று ஒன்று இருப்பதை...

ப.சிங்காரத்தின் நாவலில் பலகுரல் தன்மை

ப.சிங்காரம் 1920ஆம் ஆண்டு சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் இந்தோனேஷியாவில் உள்ள மைடான் நகரில் வட்டிக்கடைக்கு ஊழியராகச் சென்றார். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றி 1997-ல் மறைந்தார். மைடான்-சின்னமங்கலம்...

கோதையுள் எழுந்த நீலம்

                            வாழ்வில் ஒருசில இலக்கியங்கள் எந்தத் தருணத்தில் வாசித்தாலும் பித்தெழச் செய்து நம்மை வேறோர் வெளிக்குக்...