Tag: கனலி_29
“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு...
கோடையில் தளிர்த்த குளுமை- (வண்ணதாசன் கதைகள்)
1
தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் மிகச்சிலரே. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஆ.மாதவன் போன்று, எழுபதுகளில் எழுதவந்த சிறுகதை ஆசிரியர்களின் பெரும் பட்டாளத்தில் தனித்துவமானவர் வண்ணதாசன்.
நவீன...
அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]
"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன்
புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியான நேரத்தில்...
தாம்பத்தியம்-சாரா ஜோசப் ...
இன்று அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி. உண்மையில் நான் நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பினேன். இதோ இப்போது அவளெதிரே. ஆனால் அவள் என்மீது...
அவக்
காளியாத்தாள் ஒய்யாரமாகச் சப்பரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்சுற்றி வருவதைத் தூரத்தில் நின்று பார்த்தார் சீனிச்சாமி. ”வாழ்நாள் பூரா உன்னை தோளில தூக்கிச் சுமந்து சுத்துனேன். கடைசியில கைவிட்டுட்டீயே” என விரக்தியாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டார்....
வழித்துணை
கன்னத்தில் செல்ஃபோனின் ’விர்ர்’ என்ற அதிர்வை உணர்ந்தேன். தூக்கத்தின் அரைமயக்கத்தில் அது கைக்குள் பொத்திப்பிடித்த குருவியின் சிறகதிர்வைப் போல நேராக நெஞ்சில் படபடத்தது, பதறி சற்று கைவிலக்கினால் பறந்துவிடும் என்பது போல.
நெடுநேரமோ அல்லது...
கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]
கிருஷ்ணன்(கே) சுரேந்திரன்
புனை பெயர்: கே. சுரேந்திரன்
இலக்கியச்சேவை:
சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள் ஏராளமாக எழுதியிருந்தும் நாவல்கள் மூலம்தான் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய நாவல்களில் ‘தாளம்’,...
இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா
பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற...
இன்றைக்கும் காந்தியடிகள் பொருத்தமாக இருப்பதற்கானப் பத்து காரணங்கள் ...
(மகாத்மாவின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சில சிந்தனைகள்)
அடுத்த வாரம், மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அனுசரிப்போம். அவர் உயிர்நீத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் காந்தியார்...
தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த புரிதலும்.
பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில் எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு...