வ.அதியமான் கவிதைகள்
1. வெந்து தணியாத ஒரு காடு
சொல்
இன்னும் எவ்வளவு நேரம்
இந்தப் புல்லாங்குழலை
இப்படி
வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்?
சொல்கிறேன்
இந்தப் புல்லாங்குழல்
மீண்டும்
மூங்கில் மரமாய்த் திரும்பும் வரைக்கும்
அம்மரம்
மூங்கில் புதராய்ச் செழிக்கும் வரைக்கும்
அப்புதர்
மூங்கில் வனமாய்ப் பெருகும் வரைக்கும்
அவ்வனத்தின் பச்சையை
கருங்குயில் ஒன்று
உச்சியில் அமர்ந்து
கூவும் வரைக்கும்
2. குலசாமி
வேகவேகமாய்
படியிறங்கிக்...
க.மோகனரங்கன் கவிதைகள்
1)புகல்
பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து.
2) மிச்சில்
உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம்...
லீனா மணிமேகலை கவிதைகள்
கெட்ட செய்தி
நல்ல செய்தி
1.
உங்கள் வாசற்படியில் என்னை
அடித்துக் கொன்றார்கள்
நீங்கள் அழைக்கப்படாத
ஊர்த் திருவிழாவிற்குப்
பலியிடப்பட்ட
என் விலா துண்டொன்றை
உங்கள் மௌனத்திற்கான
கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள்
கெட்ட செய்தி
நான் சாகவில்லை
உங்கள் கழுத்தில்
தெறிகுண்டின் சில்லென
புடைத்துக் கொண்டிருக்கும் என் குரலைக்
குணப்படுத்தத் துடிக்கிறீர்கள்
உங்கள் தோலில்
குத்திய பச்சையெனப்
படர்ந்து கொண்டிருக்கும்...
தாமரைபாரதி கவிதைகள்
சோதனை
1.
என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும்
2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே
3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...
சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்
1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது
எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள்.
2). தொட்டதெல்லாம்
பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம்...
நீரை மகேந்திரன் கவிதைகள்
1.
அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன!
அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன.
அதிலிருந்து கிளை பரவியிருந்தோம்
பூக்களும் கனிகளுமாக
வசந்தம் கொண்ட காலத்தில்
கீழவாடையின் கொடும் மின்னல்போல,
துயரச் செய்தியானது அப்பாவின் இழப்பு.
ஆயிரங்கரங்களில்
பலங்கொண்ட மட்டும் யாரோ மரத்தை ஆட்டினார்கள்
கொப்புகள் உதிர்ந்தன,
கூடுகள் சிதறின,
இன்றோ நாளையோ...
அர்ஜூன்ராச்-கவிதைகள்
1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம் கத்திரியைக் கையளிப்பதுமற்றும்ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வதுதொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுநேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து...
செல்வசங்கரன் கவிதைகள்
லலிதா அக்கா
எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...
காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை
கைவிடப்பட்ட மூச்சுகளைப் பிடித்துப் பிடித்துஉடலுக்குள் ஏற்றுகிறேன்ஆனாலும் எட்டு வைப்பதற்குள்தட்டையாகிவிடுகிறதுகாற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்கயிறு என் நஞ்சுக் கொடிமாஞ்சாவில் கலந்திருப்பதுஎன் எலும்புத் துகள்பசை என் ரத்தம்பறத்தலின் இடையில்வரும் தலைகள் ஏன் அறுந்து விழுகின்றனஎன்று...
தேவதேவன் கவிதைகள்
அபிநயம்
அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை?
இளைப்பாறல்
போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில்.
ஒவ்வொரு மனிதனையும்
ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்?
கடவுளும் சாத்தானும்
அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய...