சாகிப்கிரான் கவிதைகள்

 நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ...தூ... எல்லோரும் அன்பாகக் கேட்கிறார்கள்தான் பிறகு குறுகிய சந்துகளின் அரசாணிகள் அப்படியே அந்தப்...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1.சொன்னபடியே ஒரு மழைக்காலம் ஒரு நிழலுமற்ற நம் மரங்களும் வாடிவிட்டன மழைக்காலம் சமீபத்தில் இருப்பதன் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன நம் சிறிய இனிப்புகளை முன்பு போலவே பாதுகாக்க இம்முறையும் முயன்றோம் இம்முறையும் நம் இனிப்புகள் கரைந்துவிட்டன சொன்னபடியே ஒரு மழைக்காலம் பெய்யத் தொடங்கியிருக்கிறது ஒரு நிழலுமற்ற நம் மரங்களின் மேல். .... 2....

ஜீவன் பென்னி கவிதைகள்

வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள் சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள், ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். * கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது உடல் முழுவதும் குண்டுகளைச்...

லீனா மணிமேகலை கவிதைகள்

கெட்ட செய்தி நல்ல செய்தி 1. உங்கள் வாசற்படியில் என்னை அடித்துக் கொன்றார்கள் நீங்கள் அழைக்கப்படாத ஊர்த் திருவிழாவிற்குப் பலியிடப்பட்ட என் விலா துண்டொன்றை உங்கள் மௌனத்திற்கான கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள் கெட்ட செய்தி நான் சாகவில்லை உங்கள் கழுத்தில் தெறிகுண்டின் சில்லென புடைத்துக் கொண்டிருக்கும் என் குரலைக் குணப்படுத்தத் துடிக்கிறீர்கள் உங்கள் தோலில் குத்திய பச்சையெனப் படர்ந்து கொண்டிருக்கும்...

தூரிகை

இந்த பட்டாம்பூச்சி வாழ்வை  எவ்வாறு ரசிக்கின்றது  காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன  வானிலிருந்த விழுந்த மழைத்துளி  சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்  தவத்தினை கலைத்துவிட்டது  பசிய காட்டில்  திரியும் பட்டாம்பூச்சிகள்  மனிதர்களையே பார்த்திருக்காது  பச்சை போர்த்திய இவ்வுலகம்  பட்டாம்பூச்சிகளுக்கானது  கடவுள் தனது  தூரிகை வண்ணங்களால்  பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்  மனிதன் சுதந்திரத்தின்  ஆனந்தத்தை அனுபவிக்க  பட்டாம்பூச்சியாகத்தான்  பிறவியெடுக்க வேண்டும்!   ப.மதியழகன் 

தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்

1 தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு சற்று தூரத்தில் சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன் கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான் அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில் செம்மஞ்சள் துவரை. சூரியன் உதிர்ந்த மாலையில் உரலைப் பின்னும் கயிறு பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை நெய்யும் வெண்ணையும் துழாவும் 2 தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக்...

அகச்சேரன் கவிதைகள்

  1) தேட்டம்   பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த மலைப்பாதையில் மேலேறுகிறேன் சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள் தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன சாலையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.   ●●●   செத்தவன் பிழைத்தானெனில் சங்கொலி நிறுத்தம் சங்கொலி நின்றிடிலோ சடங்குகள் முடக்கம் சடங்குகள் முடங்கியபின் மலர்பாடை கலைப்பு பாடை கலைந்த பின்னர் திரண்டவர் தளர்நடை திரண்டவர் சென்ற தன்பின் ஏங்குமொரு வெட்டுகுழி   ●●●   ...

காதலிழந்த காலத்தின் இசை

ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள் இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள் பொழுதின் நெடும்பாதை நீண்டாலும் இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும் பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும் சங்குகளின் உள்ளே...

வியாகுலன் கவிதைகள்

1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ்   பூனைக்கு மூஸ் என்று யார்தான் பெயரிட்டு இருப்பார்கள் அந்த மூஸ் என்ற...

அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது

30 கக்கடைசியில் ஏர்வாடி தர்க்காவில் அம்மாவைச் சேர்த்தோம். சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில் என் தலை தடவினாள். அப்போது கலைந்த முடியை எத்துணை முறை சீவியும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. 29 வெள்ளி அன்று அம்மா பூண்டிருப்பது மௌனமா விரதமா தனிமையா தெரியாது அன்றைய மதிய உலை கொதபுதா என்று கொதிய வேடிக்கை பார்ப்பாள். 28 அம்மாவின் காதோரச் சுருள்முடியிடம் அப்பாவுக்கு இருந்த பயபக்தி என்...