தேவதேவன் கவிதைகள்
பெருவெளியில்
தரையும் கூரையும்
நான்கு சுவர்களுமில்லாத
பெருவெளியில்
அழிந்துபோகக்கூடிய
தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஆங்கே தவழ்வதோ
அழியாப் பெருவெளியைத்
தாயகமாகக் கொண்டதாம்
அன்பு கருணை அறம் மெய்மை
என ஒளிரும் தேவதைகள்!
சின்னஞ் சிறிய மலர்
குத்தவைத்துக்
குனிந்து பார்க்கவைத்தது...
ஸ்ரீநேசன் கவிதைகள்
சூரியனுடன் வருவேன்
நான் இங்கிருப்பேன்
இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன்
மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி
இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு
நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...
உமா மகேஸ்வரி கவிதைகள்
சூரியன் ஒளிரும் திரைகள்
வாகன கீதம்
நொறுங்கிய வளர் பிறை
பத்திரமாயிருக்கிறது
மல்லிகைச் சரத்தருகே
இருள் தித்திக்கும் மரங்கள்
சோம்பல் முறிக்கும் காலை
அங்கே ஏனோ பூக்காத
மஞ்சள் மலர்கள் இங்கே
எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில்
சிராய்தததோ
ஒரு சொல் சிலாம்பு
துடைத்தும் போகாதது.
இம் முறை ஒரே...
பெருந்தேவி கவிதைகள்
நகரம்: சில மாதங்களுக்குப் பின்
வீட்டைவிட்டு வர
அனுமதிக்கப்படாத
எழுபது வயது முதிய பெண்மணி
நகரத்தின் மையப்பகுதியில்
ஒரு பூங்காவுக்கு வருகிறாள்
உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள்
காலை நேரம்
சூரியனைத் தின்ன நினைக்கிறாள்
அங்கே வசிப்பவர்கள்
பூங்காவில் வேக வேகமாக
ஆறடி விட்டு
நடைப் பயிற்சி செய்கிறார்கள்
ஒருவரை ஒருவர்...
குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள்
முஸ்தீபு: நானின் கற்பிதம் உடையும் போது நாமனைவரும் அல்பைகள் ஆகிறோம்
அது ஒரு ஆனந்தக் களி நடனம்தான்.
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
நான் பேசிக் கொண்டிருந்தேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
அவன் பேச ஆரம்பித்தான்
எனக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது
நான் கோவமாய்...
அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது
முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும்
என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள்.
எப்போதும் சொல்பேச்சு
கேட்காத குழந்தை நான்
இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த
குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன்
"காப்பிச் செடிக்கு உரமிட வேண்டும்
சின்னவனே உன் வேட்டைக்கத்தியை
எறிந்துவிட்டு வா"
அக்கக்கா...
செல்வசங்கரன் கவிதைகள்
பாவனை
வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய
விரல்களும் என் பாவனைக்கு இணங்கி
வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது.
வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம்.
உள்ளே சொன்னேன்.
வெளியே வாய் வந்து குவிந்து...
ஜீவன் பென்னி கவிதைகள்
பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல்
1.
ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது
இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது.
முடிகின்ற போது
நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக
இருக்கிறது.
2.
இந்தச் சாலைகள் முடிவற்றவை
நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே
இப்பட்டாம்பூச்சிகள்...
பா.ராஜா கவிதைகள்
உறங்கும் ஒருவன்.
அதிகாலை 4:43, எழுப்புகிறது
எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று
காதோரம் கிசுகிசுக்கிறது
ஆர்வம் மேலிடவில்லை
ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது
அதற்கும் அலட்சியம்
தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில்
உன்னை
காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன்
என்ற போதும் கூட
அச்சமோ...
கார்த்திக் திலகன் கவிதைகள்
நன்றி
ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன்
என் பாதை எங்கும்
மணல் மணலாய் எழுத்துக்கள்
எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி
எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக
என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி
எல்லாப்...















