செல்வசங்கரன் கவிதைகள்

பாவனை வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய விரல்களும் என் பாவனைக்கு இணங்கி வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது. வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம். உள்ளே சொன்னேன். வெளியே வாய் வந்து குவிந்து...

ஜீவன் பென்னி கவிதைகள்

பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல் 1. ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது. முடிகின்ற போது நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக இருக்கிறது. 2. இந்தச் சாலைகள் முடிவற்றவை நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே இப்பட்டாம்பூச்சிகள்...

பா.ராஜா கவிதைகள்

உறங்கும் ஒருவன். அதிகாலை 4:43, எழுப்புகிறது எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று காதோரம் கிசுகிசுக்கிறது ஆர்வம் மேலிடவில்லை ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது அதற்கும் அலட்சியம் தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில் உன்னை காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன் என்ற போதும் கூட அச்சமோ...

கார்த்திக் திலகன் கவிதைகள்

 நன்றி ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன் என் பாதை எங்கும் மணல் மணலாய் எழுத்துக்கள் எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி எல்லாப்...

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்

ஞானம் போதும் போதும் இருந்ததென அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து இன்னும் ஒரு நாளோ இரு நாளோ புகாரேதுமின்றி வான் நோக்கிக் கிடக்கிறது வெயிலையும் வாங்கிக்கொண்டு காற்றுக்கு அசையும் அதை அதன் சொற்ப வாழ்வில் என் கரங்களும் ஸ்பரிசிக்கட்டுமேயென எடுத்தேன் எத்தனை மருது, வண்ணம், வாசனை, வடிவம். தான்மை...

ஞா.தியாகராஜன் கவிதை

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது எதிர் வீட்டில் நீ...

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

மலைக்குத் திரும்புதல் வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும் மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும் குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும் செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன் சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன் என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள் பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள் குளிர்...

கட்டக்கால் வேட்டை

தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து, முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன். கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது. தலைக்கு வீசிய ஐந்தாறு வெங்காய வெடிகளுக்கும் பாய்ச்சல் குறையவில்லை. பின்னால் கேட்கும் குட்டிகளின் அலறலுக்கு வெறிவீறிட திரும்பிய பன்றி எனை மல்லாத்திவிட்டு ஈரிரண்டு...

ச.துரை கவிதைகள்

செம்மந்தி கிழவி தனது விற்பனை மீன்களுக்குத் தானாகவே புதுப் பெயரிடுவாள் தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள் என்ன மீனென்று கேட்டேன் செம்மந்தி என்றாள் வித்தியாசமான பெயர் உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன் அதைக் கேட்டதும் கடல் தனது உடலை பாத்திரத்தைப் போல...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

1.) கெடாவெட்டுதல் இந்த வருடம் அவ்வீட்டில் நிச்சயமாய் ஒரு உயிர் போகுமென்கிறது ஒப்புக்கொடுக்காமல் நிற்கும் கிடா. முதியவருக்கோ இன்னும் கொஞ்சநாள் இருக்கலாமெனத் தோன்றுகிறது ஒருவேளை அது குறிப்பது  என்னைத்தானோ என பயத்திலொரு உதைவிட்டது வயிற்றிலிருக்கும் சிசு ச்சே… ச்சே… நாம் வளர்த்த ஆடு அவ்வளவு...