படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

உப்பளத்து கால்கள்

அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த கடலை விட பெரிதாக இந்த கற்களை விட உறுதியாக சமயங்களில் அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை உற்பத்தி செய்கின்றாள் அவள் தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள் அவளின் உதடுகள் வெடித்த பனிப்பாறையை நினைவூட்டுகின்றன அயற்சியால் தன்னிச்சையாக நாக்கு ஈரமாக்கிட பற்கள்...

பவா கதைகளின் கருவூலம்

அண்மையில் நான் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட எழுத்தாளர்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு எழுத்தாளராக பவா செல்லத்துரை அவர்களை நான் காண்கின்றேன். எழுத்துகளின் ஒரு குறுகிய வட்டத்தினுள் அமைக்கப்பட்டிருந்த ஓர் கோணத்தினுள் அமைதி...

தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்

1 தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு சற்று தூரத்தில் சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன் கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான் அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில் செம்மஞ்சள் துவரை. சூரியன் உதிர்ந்த மாலையில் உரலைப் பின்னும் கயிறு பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை நெய்யும் வெண்ணையும் துழாவும் 2 தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக்...

தி.பரமேசுவரி கவிதைகள்

தப்பித்தல் அனுமதியின்றி என் வீட்டில் சிலர் என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை யாரோ என்னை வெறிக்கின்றனர் அழைக்கின்றனர் கடக்கின்றனர் அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன் தப்பிக்க முயன்றால் எப்போதும் சிக்கிக் கொள்வேன் என் உறக்கத்தைத்...

அனார் கவிதைகள்

நீங்குதல் எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன பின் இழுத்துச் செல்கின்றன. தாரை தாரையாக உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை காயங்களில் இருந்து குடைந்து எடுத்துச் செல்கின்றன மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த வெறுமையின் உதிரத்தை மணந்து ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன தனக்குத்தானே தூபமிடும் வசியமறிந்தவர்கள் அறிவார்கள் காலத்தை தூவி...

கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.

1. வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன. காதுகளில் வண்டொன்று சத்தமிடுகிறது. காலங்கள் கலைந்து தோன்றுகின்றன. கண்கள் நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன. மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும் சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது. அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி கள்மனம். மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய உடல். இடைவெளிகளை உடைத்து விடுகின்ற காலம். கற்பனைகளை அள்ளிய கைகள்...

வெள்ளை விழிகள்

1 மியான்மார் எல்லையில் அமைந்துள்ள தாய்லாந்தின் மேற்கு மாநிலமான தக் பிரதேசத்தின் மைலாவை நான் சென்றடைந்தபோது இருள் முழுவதுமாக கவிழ்ந்திருந்தது. வளைந்து நுழைந்து மேடுகளின் வழியாக நீண்டு கிடக்கும் சரிவுப்பாதையில் ஓடிவந்த சிவப்பு நிற...

தமிழடி

  உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப் புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும் தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன் நான்மாடக் கூடல் நகர். - பரிபாடல்   நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள்...

வீரயுக நாயகன் வேள்பாரி – வாசிப்பு அனுபவம்

பாரியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள் என்று யாரேனும் உங்களைக் கேட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் என்பதாகத் தானே? கடந்த வாரம் வரை என்னை யாரேனும்...

கலண்டரில் உட்காரும் புலி – கவிதைத் தொகுப்பு

சொற்களின் வேட்டை      அதிக பட்சமாக ரசனையைக்கொடுக்கும் சொற்களின் மெல்லிய போதையும், விஞ்ஞானத்தனமான விநோத நுட்பமும்,  கணிதவியல் புதிர்களை விடுவிப்பதும் வேற்று விடையோடு தனியே அவதிப்படவைக்கும் சுகமான அனுபவத்தை சுவைபடப் பேசி நிற்கின்றது கலண்டரில்...