படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

காணாமல் போவது எத்தனை வசீகரமானது.

தினம் தினம் எத்தனையோ பேர் காணாமல் போகிறார்கள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் மனநிலை சரியில்லாதவர்கள். காணவில்லை விளம்பரங்கள் செய்தித்தாள்களில் தொடர்ந்து வருகின்றன.   அவள் மட்டும் தொலைவதே  இல்லை எங்கு போனாலும் வழி தெரிந்து விடுவது கொடுந் துயரம். காணாமல் போகக்கூட ஆணாக வேண்டும்   தொலைவதற்கு முன்பான முன்னேற்பாடுகளின் பட்டியல் நெடுஞ்சிகை மழித்தல் காயம் முற்றும் மூடும் காவி ருத்ராட்ச மாலை திருவோடு அணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கை ஏதோவொரு...

முத்துராசா குமார் கவிதைகள்

எச்சித்தட்டு புதையலாகத் தென்பட்டது தட்டில் பொறித்தப் பெயர். வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை. இரவில் எப்படியும் அபகரித்துவிட புதையலுக்கு மேலே வனம் செய்து நீர் தேக்கினேன். வனம் அழித்து வறட்சியாக்கியும் புதையலைப் பெயர்க்க முடியவில்லை. மூன்று வேளைத் தோல்விகள் தாளாது பெயருடைய ஆளையே விழுங்க எழுந்தேன். சுவரில் தொங்கும் கண்ணாடிச் சட்டகத்துக்குள் சேரில் அமர்ந்திருந்தார்...

 ப்ரியா தம்பி”யின்  “பேசாத பேச்செல்லாம்” கட்டுரைத் தொகுப்பு.

ஒரு புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு அதைப்பற்றி நிறைய எழுத வேண்டுமென்று மனம் ஒருபுறம் பரபரக்க, இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்ற நிறைவு மறுபுறமும் ஒருசேர ஏற்படும் உணர்வை அனுபவித்தது...

செண்பா சித்தி

“வீட்ட  அலங்கோலம் பண்ணி வைச்சி இருக்கான், ஹாலுகுள்ள ஷூ கிடக்கு. எத்தனை டைம் சொல்றது ஷூ போட்டு வீட்டுக்குள்ளே வராதேன்னு” இப்போ தான் கொஞ்ச நேரம் முன்ன முழிப்பு தட்டுச்சி. எழுந்திரிக்க மனசு இல்ல....

பா.திருச்செந்தாழை கவிதைகள்.

ரகசியங்களற்றவனின் நிழலில் கண்ணாடி வளர்கிறது. எப்படியாயினும், இதற்கு ரகசியமெனப் பெயரிட நான் இன்னொருவருக்கும் இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது. ரகசியங்கள் பெறுமதியானவை என்பதிலிருந்து வெளியேறிவிட்ட என் புதுவயதில் நான் சிறிய காற்றாடிகளை நீண்ட தொலைவில் செலுத்தும் ஞானம் பெற்றேன். எல்லாவற்றிலிருக்கும் ரகசியங்களை என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது. அங்கே குருதியற்ற ஓருடல்...

அவள் நர்ஸ் ஆகிறாள்

வழமையாக காலை ஐந்தரை மணிக்கு கண் விழித்துப் பழகியது அவ்னி வீட்டு நாய். எப்போதும் அவ்னி சுத்தமாக இல்லாவிட்டாலும் நாயைச் சுத்தமாக வைத்திருப்பான் கழுத்தின் அளவுக்கு ஒரு வெள்ளி வளையம். ஏழாயிரத்து ஐந்நூறு...

வெதும்பல்

அன்று சுபத்ராவுக்கு சமையல் கட்டில் வேலை நிறைய இருந்தது. அம்மாவின் கைமணம் போல் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள். கற்றும் கொண்டாள். ஒருவேளை அப்பா பரமேசன் பேசும் பேச்சுக்களிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்....

மதுரை குடைவரைகளில் பசுமைநடை

சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்கள் அழகாய் இணைந்து குடைவரை போலிருப்பதை பார்க்கலாம். இதில் குடைவரை என்ற சொல்லை குறித்து தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சங்க காலத்தில் கோயில்கள் கோட்டம் என்ற...

“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு...

நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்கின் காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக்...

உதிரும் கணத்தின் மகரந்தம்.

சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின் வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது பொக்லைன் இயந்திரம் அரைகுறை ஆடைகளோடு தாதியின் தடிக்குப்பின்னிருந்து அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய் ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்தது ஒவ்வொருமுறையும் இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள் அகப்படும்படியானது ஏழு ஆண்டுகளுக்கு...