சிறுகதைகள்

உலராதிருக்கும் வரை

என்னதான் வாய்கிழிய "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், ஜீவகாருண்யம் என்று பேசினாலும், ஒரு கொசுக்கடி நம் உயிர்நேயத்தை ஒரு கணமாவது பல்லிளிக்கச் செய்துவிடுகிறதல்லவா? முதல்வன் திரைப்படத்தில் சுஜாதா எழுதியிருப்பார் இப்படி. "கொசுவுக்கெல்லாம்...

கற்ரை கசடற

"சிவசேகரம் என்னைக் கொண்டு போய் ஹொஸ்பிற்றலில விடும்" கடுமையான தோற்றத்தோடு வார்த்தைகளை எறிந்தாள் சாரதா. இவ்வளவு நாளும் இல்லாது தடித்திருந்தது அவள் குரல். எறியப்பட்ட வார்த்தைகள் சுவர் எங்கும் தொங்கி ஆட்டம் காட்டின. அதுதான் அவளது...

சங்கீத சேவை – சிறுகதை

தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.  “இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?”  என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.     “நிறுத்தற...

ஷார்ட் சர்க்யூட்

கால் கடுத்து நின்றிருக்கும் இரும்புக்குக் குளிர் நடுக்குகிறது. அடி தெரியாமல் தழைய தழைய கால் போர்த்திவிடுகிறது காடு. "காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா" என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம். அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு...

தாலாட்டு-ஆதவன்

வருடம் தவறாமல் இ‌ந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார். இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...

ஒரு கனவும், சில இரவுகளும்- டணிஸ்கரன்

ஃபான்தான்காவின் வானம் வழமைக்கு முன்னமே இருட்டி இருந்தது. மழை தொடங்குவதற்கு முன்னதாக வாடகைக்கு விடுதியறையொன்றை எடுத்துக்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க கையில் இருக்கும் அஸ்தலின் பம்மை குறைந்தது பத்துத் தடவைக்குமேல்...

செர்ரி ஃப்ளாசம்

வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த...

சுருக்குக்கம்பி

மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டியுடன் கொளுத்தும் வெயிலில் சோர்ந்து நடந்தான் சுடலை. தோளில் ஒரு சிவப்புத்துண்டு. கையில் ஒரு நீண்ட கம்பு. அதன் முனையில் ஒரு சுருக்குக்கம்பி. பத்தடி தூரத்தில் வியர்வை வடிய...

நீர்க்கன்னிகள்

ஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள் இருந்தன. சாரதாவுக்கும் கற்பகத்திற்குமான வீடு வகிடாக பிரிக்கப்பட்டு வாசலுக்கு முன் இரண்டு திண்ணைகளும், முன்னொரு வீடும் பின்னொரு வீடுமாக இருந்தன.  உள்நடையின் மத்தியில் பாத்திரங்கள் புலங்குவதற்கும், கலக்கட்டு,...

காற்றிலோர் கீதம்

                                     (1) விடியற்காலை நேரத்தில் பயணமாகப் புறப்பட்டது கடைசியாக எப்போது என்று ஞாபகத்தில் பிடிபடவில்லை. சமீப வருஷங்களில் அப்படியான பயணம் வாய்க்கவும் இல்லை. உறக்கம் கலைந்துவிடும் அதிகாலைகளில் மனதிற்குள் ஒலிக்கும் இசைக்குச் சொற்களைத்...