கவிதைகள்

கலாமோகன் கவிதைகள்

ஏன் தவம்?  இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல...

முத்துராசா குமார் கவிதைகள்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர்...

அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ் என நீ உச்சரிக்கும்போதெல்லாம்  இருவாட்சியின் பெரும்பாத நிழல் என் மேல் கவியும் உன் நாக்கு  மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி  பற்களில் பட்டு  உதடுகளைக் குவிக்கும்போது  பனி பிளந்து இலை குளிர்ந்து  காற்று தணியும்  மழைப் பெய்து ஓய்ந்த கடலின்  நீலம் பாய்ந்த உன் முகத்தில்   அச்சொல் பூரணமடையும் போது பிறை தோன்றும் பின் மறையும் இடையில் விரியும் துண்டு வானம்  எனக்கும் உனக்கும் மட்டுமே. ———————————————— பூப்பனி  பெய்யும் ஒரு...

பாலை – பொதுத் திணையின் அவலம்.

1.அதிகரிக்கும் சிறுபொழுது.   காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள் சுமை மனிதனாக இருக்கும் தலைவன் லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம் குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான் எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை இங்கு,...

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

மலைக்குத் திரும்புதல் வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும் மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும் குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும் செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன் சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன் என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள் பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள் குளிர்...

குரு

சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம், இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம் சுர குருவுக்கோ சரியான கண்ணாம். ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம். பதினஞ்சு மாசி பகல் துயின்றது. வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி பானு மறைந்தான்....

உப்பளத்து கால்கள்

அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த கடலை விட பெரிதாக இந்த கற்களை விட உறுதியாக சமயங்களில் அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை உற்பத்தி செய்கின்றாள் அவள் தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள் அவளின் உதடுகள் வெடித்த பனிப்பாறையை நினைவூட்டுகின்றன அயற்சியால் தன்னிச்சையாக நாக்கு ஈரமாக்கிட பற்கள்...

கார்த்திக் திலகன் கவிதைகள்

 நன்றி ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன் என் பாதை எங்கும் மணல் மணலாய் எழுத்துக்கள் எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி எல்லாப்...

கு.அ.தமிழ்மொழி கவிதைகள்

  1) மிதிபடும் காலம் I. என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன் நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அதைத் தற்செயலாகப் பார்த்தேன் அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது ஓ! என் அன்புக் காலணியே! நீ...

இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...