கவிதைகள்

சுஜா கவிதைகள்

வாழ்ந்தென்ன? தரையில் கையூன்றி எழுந்தவாறே எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மாலை நான்கு நல்ல நேரம்தான் யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம் வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும். அள்ளி முடிந்து கொண்டையிட்டு வாசற்கதவைத் திறக்கிறாள். மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க சற்றே தூக்கிப் பிடித்தபடி படிக்கட்டில் கால்...

தி.பரமேசுவரி கவிதைகள்

தப்பித்தல் அனுமதியின்றி என் வீட்டில் சிலர் என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை யாரோ என்னை வெறிக்கின்றனர் அழைக்கின்றனர் கடக்கின்றனர் அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன் தப்பிக்க முயன்றால் எப்போதும் சிக்கிக் கொள்வேன் என் உறக்கத்தைத்...

ஞா.தியாகராஜன் கவிதை

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது எதிர் வீட்டில் நீ...

ச. துரை கவிதைகள்

  நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு   . இந்த இசைத்தட்டு முடிந்ததும் யாருடைய வீட்டு கதவை தட்டப்போகிறேன் என நினைத்ததும் அச்சம் அவன் தலையை கோதியது அமர்ந்திருக்கும் இடத்தில் கடலும் எரிமலையும் முளைத்தது ஏன் இலைகள் என் மீது மட்டுமே உதிர்கின்றன என்று கத்தினான் அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...

பா.ராஜா கவிதைகள்

நிலுவை ஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால் எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...