கவிதைகள்

பா.ராஜா கவிதைகள்

உறங்கும் ஒருவன். அதிகாலை 4:43, எழுப்புகிறது எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று காதோரம் கிசுகிசுக்கிறது ஆர்வம் மேலிடவில்லை ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது அதற்கும் அலட்சியம் தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில் உன்னை காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன் என்ற போதும் கூட அச்சமோ...

இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

ஜீவன் பென்னி கவிதைகள்

வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள் சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள், ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். * கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது உடல் முழுவதும் குண்டுகளைச்...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை...

வாராணசி கவிதைகள்

  காலம்         இங்கே   காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று  காலங்களுக்கு அப்பாலான  காலம்    இங்கே   இன்று பிறந்த இன்றும்  நாளை பிறக்கும் நாளையும்  பிறந்ததுமே   இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன    இங்கே   அன்றாடம் உதிக்கும் சூரியன்  முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது  முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது    இங்கே  காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்  யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்  மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.    இங்கே   ஒசிந்து...

ஞா.தியாகராஜன் கவிதைகள்.

1. அப்போதுதான் அதிசயமாக யாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அது வேறுவழியில்லாமல் அன்றைக்குதான் முதன்முதலாக அதை முயற்சித்தேன் மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றி எனக்கெதுவும் தெரியாது. 2. யார் சொல்வதற்கு முன்பும் முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச் சொல்லிவிடுகிறேன் இருந்தாலும் ஒரு தடவை அவர்களும் அதை சொல்லிவிடுகிறார்கள் நான்...

ச.துரை கவிதைகள்

ஏனெனில் கைகள் தேயிலை தோட்டத்திற்கு குத்தகைவிடப்பட்டதும் சிலந்திகளோடு உறங்கி எச்சில் கோப்பைகளை கழுவுவேன் என்னிடம் அறுபது மணிநேரம் இயங்ககூடிய போதை வஸ்து இருந்தாக நம்பினார்கள் தோட்டத்திலிருக்கு சூளைக்கு மாற்றப்பட்டதும் எனது கைகள் வெட்டப்பட்டு வேறு கைகள் பொருத்தப்பட்டன யார் இந்த அந்நியனென்று கேட்ககூடாது என் உடையென்று கதறகூடாது கொஞ்சமும் பொருத்தமற்ற உணவுக்காக சட்டங்களில் மணல்களை நிரப்பி...

பத்மபாரதி கவிதைகள்

வழித்துணை அனாந்தர ஊஞ்சலிலிருந்து தவறி விழுந்து ஓவென்று அழுகிற அவள் சின்னஞ்சிறுமி எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும் செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில் வலி கரைந்தே போகிறது சதா கோபிக்கும் அப்பா தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி அப்படி ரகசியங்களால் வளரும் சிறுமியின் பின்னலிடையில் அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து பச்சை மாறாது...

மதுசூதன் கவிதைகள்

முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக... ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ? இப்போதைக்கு ஒரு காகம், ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க...

பா.ராஜா கவிதைகள்

1)இதய வடிவ பலூன். வெறுங்காலுடன் மலையுச்சியை அடைந்தது சிரமம் தான் என்றாலும் உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன் கையிலிருந்ததால் பெரிதாய் ஏதும் அயற்சியில்லை அல்லது அது கூட இங்கு தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய் கற்பனை செய்துப் பார்க்கலாம் இதயத்தையும் கிட்டத்தட்ட அந்த பலூனைப்போல பரிசளிக்க நினைத்தால் அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது. 2)கடகம். உலக புன்னகை தினம் என்று ஒன்று இருப்பதை...