செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...

காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை

கைவிடப்பட்ட மூச்சுகளைப் பிடித்துப் பிடித்துஉடலுக்குள் ஏற்றுகிறேன்ஆனாலும் எட்டு வைப்பதற்குள்தட்டையாகிவிடுகிறதுகாற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்கயிறு என் நஞ்சுக் கொடிமாஞ்சாவில் கலந்திருப்பதுஎன் எலும்புத் துகள்பசை என் ரத்தம்பறத்தலின் இடையில்வரும் தலைகள் ஏன் அறுந்து விழுகின்றனஎன்று...

தேவதேவன் கவிதைகள்

அபிநயம் அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை? இளைப்பாறல் போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில். ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்? கடவுளும் சாத்தானும் அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய...

க.மோகனரங்கன் கவிதைகள்

1)சிறிது வெளிச்சம் எண்ணும் போதெல்லாம்எடுத்துப் பார்க்கஏதுவாகப்பணப்பையினுள்பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்,கடந்தகால மகிழ்ச்சியின்அடையாளமாகஅந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை.மறதியின்மஞ்சள் நிறம் படர்ந்துமங்கிவிடாதிருக்க வேண்டிமனதின்இருள் மறைவில்,நிதமும் அதைநினைவின் ஈரத்தில்கழுவியெடுத்துக்காயவைப்பேன்.வயோதிகத்தின் நிழல்கள் கவிந்துகனவுகளின் வர்ணங்கள்மெல்ல வெளிறத் தொடங்கும்இம் மத்திம வயதிலும்ஒரு பொழுது வாழ்ந்தேன் என்பதன்...

ஆனந்த்குமார் கவிதைகள்

சில்லறை ஒரு பெரியரூபாய் நோட்டு மொத்தமும்சட்டென உடைந்துசில்லறைகளாய் மாறிவிட்டதைப்போலஒரு சின்னத் தடுக்கல்அந்த ஆளுயரக் கண்ணாடியைப்பிரித்துவிட்டதுஆயிரம் சின்ன கண்ணாடிகளாய்.ஒவ்வொரு சில்லிலும்இப்போது தெரிவதுஒரு குட்டி மிட்டாய்.சுவைத்துச் சுவைத்தாலும்ஒரு மிட்டாயின் ஆயுள்குறைந்தது இரண்டு நிமிடங்கள்.அவனது ஆளுயரம் இப்போதுஇரண்டிரண்டு குட்டி...

இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...

ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்

நோவின் தூல வடிவம் காற்றில் புதையும் ஊத்தைச் சொற்களின் பிடிமண்ணை வாரி வீசுகிறது முதிர்காமம். பச்சைக் கூட்டத்தினிடையேவலியின் இளங்குருத்து தனித்து எரிகிறது. நெருப்பைப் பழிவாங்குவதற்கெனபொழிவித்த பெருமழையெல்லாம்அம்பல முற்றத்திற்கு வெளியேஅடங்கிப் போயின. அத்தாணி மண்டபத்தில்காய வைத்திருந்தஉறக்கப் போர்வைகளை உலர விடாதுமடித்து...

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

1. நிலமும் பொழுதும் பழைய உயிரினம் நரிவால் என்று செல்லமாக அழைக்கும் தினையும் கம்பும் பாலேறினால் காவலுக்குச் செல்லும் நான் கிளிகளையும் கட்டை விரல் சிட்டுக்களையும் விரட்டுவதற்குச் சலித்துக்கொள்வேன் இரவைவிடப் பெரிய விலங்கு பகலென்று  பொருமுவேன். தையல்சிட்டுக்களோ எருக்கம் விதைகள் போலக் காற்றில்...

பா.ராஜா கவிதைகள்

நிலுவை ஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால் எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...

ஜீவன் பென்னி கவிதைகள்

வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள் சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள், ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். * கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது உடல் முழுவதும் குண்டுகளைச்...