Thursday, September 19, 2024

கவிதைகள்

முத்துராசா குமார் கவிதைகள்

ஈச்சங்கை ஹைவேஸ் தாபா வாசலில் பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும் ஈச்சமரமாகிய நான் அகல வாய்க்காவில் முளைத்தவள். மறுகாவையும் பஞ்சபாடையும் குடித்து ஆழ ஊன்றினேன். பீக்காட்டின் கரம்பைத் தின்று கறித்திமிருடன் பூத்தேன். தூண்டிலுக்கு புழுக்கள் தோண்டுகையில் பாதங்கள் கூசும். செதில் உடலேறி சறுக்கியவர்களை பிடித்திருக்கிறேன். ஓலைத் தலையினுள் தேடி ஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன். தேன்மிட்டாய்...

தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்

1 தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு சற்று தூரத்தில் சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன் கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான் அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில் செம்மஞ்சள் துவரை. சூரியன் உதிர்ந்த மாலையில் உரலைப் பின்னும் கயிறு பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை நெய்யும் வெண்ணையும் துழாவும் 2 தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக்...

ஜீவன் பென்னி கவிதைகள்

பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல் 1. ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது. முடிகின்ற போது நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக இருக்கிறது. 2. இந்தச் சாலைகள் முடிவற்றவை நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே இப்பட்டாம்பூச்சிகள்...

வியாகுலன் கவிதைகள்

1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ்   பூனைக்கு மூஸ் என்று யார்தான் பெயரிட்டு இருப்பார்கள் அந்த மூஸ் என்ற...

கலாமோகன் கவிதைகள்

ஏன் தவம்?  இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல...

முத்துராசா குமார் கவிதைகள்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர்...

அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ் என நீ உச்சரிக்கும்போதெல்லாம்  இருவாட்சியின் பெரும்பாத நிழல் என் மேல் கவியும் உன் நாக்கு  மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி  பற்களில் பட்டு  உதடுகளைக் குவிக்கும்போது  பனி பிளந்து இலை குளிர்ந்து  காற்று தணியும்  மழைப் பெய்து ஓய்ந்த கடலின்  நீலம் பாய்ந்த உன் முகத்தில்   அச்சொல் பூரணமடையும் போது பிறை தோன்றும் பின் மறையும் இடையில் விரியும் துண்டு வானம்  எனக்கும் உனக்கும் மட்டுமே. ———————————————— பூப்பனி  பெய்யும் ஒரு...

பாலை – பொதுத் திணையின் அவலம்.

1.அதிகரிக்கும் சிறுபொழுது.   காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள் சுமை மனிதனாக இருக்கும் தலைவன் லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம் குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான் எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை இங்கு,...

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

மலைக்குத் திரும்புதல் வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும் மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும் குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும் செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன் சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன் என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள் பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள் குளிர்...

குரு

சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம், இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம் சுர குருவுக்கோ சரியான கண்ணாம். ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம். பதினஞ்சு மாசி பகல் துயின்றது. வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி பானு மறைந்தான்....