படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

வே.நி.சூர்யா கவிதைகள்

1.  நவம்பர் என்பது இரவின் உறையிலிட்டுச் சிறு ஈசலும் என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும் ஒரு தபால் பெட்டி விளம்பர பொம்மைகளின் முன் கூனிக்குறுகி நிற்க நேரிடும் கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட... 2. இழப்பின் வரலாறு நீயும்...

அழிந்துவரும் கால்தடங்கள்

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளின் (Allied countries) கூட்டமைப்பு மூலம் 1943ம் ஆண்டில் The Monuments, Fine Arts and Archives Program என்ற ஒரு குழு...

ஜீவியம்

1 அவள் ஆடைகள் வெளுத்திருந்தாலும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. முன்பொரு காலத்தில் அவள் அழகாகவும் பலரைக் கவர்பவளாகவும் இருந்திருப்பாள் எனப் பார்த்தவுடன் எவராலும் ஊகிக்க முடியும். ஆனால், இப்போது சோர்ந்திருந்தாள். லௌகீக வாழ்க்கை அவள்...

மலக்குழி

‘வைடூகேனு சொல்றாங்களே, அது உண்மையிலேயே பெரிய பிரச்சினையா? கம்ப்யுட்டர்லாம் வேலை செய்யாதுன்னு சொல்றாங்க’ அம்மாவின் தம்பி குரலைக் கேட்டு மலக்குழியிலிருந்து வெளிவந்தான். மாமா என்று அவரைப் பற்றி எண்ணுவது அன்னியமாக உள்ளது, நினைவு...

ஷார்ட் சர்க்யூட்

கால் கடுத்து நின்றிருக்கும் இரும்புக்குக் குளிர் நடுக்குகிறது. அடி தெரியாமல் தழைய தழைய கால் போர்த்திவிடுகிறது காடு. "காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா" என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம். அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு...

வலி

வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு...

நீக்கம்

மகிபாலன் அலுவலகத்திற்குப் போக காரை எடுக்கச் சென்றபோது, அவன் அம்மா, “மகி, மாஞ்செடி எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சி பாரேன்” என்றாள். அவனை முன்பே அழைத்து வந்து, அந்தச் செடியைக் காட்டியிருக்க இயலாது. அதிகாலை...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1.சொன்னபடியே ஒரு மழைக்காலம் ஒரு நிழலுமற்ற நம் மரங்களும் வாடிவிட்டன மழைக்காலம் சமீபத்தில் இருப்பதன் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன நம் சிறிய இனிப்புகளை முன்பு போலவே பாதுகாக்க இம்முறையும் முயன்றோம் இம்முறையும் நம் இனிப்புகள் கரைந்துவிட்டன சொன்னபடியே ஒரு மழைக்காலம் பெய்யத் தொடங்கியிருக்கிறது ஒரு நிழலுமற்ற நம் மரங்களின் மேல். .... 2....

வ.அதியமான் கவிதைகள்

1. வெந்து தணியாத ஒரு காடு சொல் இன்னும் எவ்வளவு நேரம் இந்தப் புல்லாங்குழலை இப்படி வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்? சொல்கிறேன் இந்தப் புல்லாங்குழல் மீண்டும் மூங்கில் மரமாய்த் திரும்பும் வரைக்கும் அம்மரம் மூங்கில் புதராய்ச் செழிக்கும் வரைக்கும் அப்புதர் மூங்கில் வனமாய்ப் பெருகும் வரைக்கும் அவ்வனத்தின் பச்சையை கருங்குயில் ஒன்று உச்சியில் அமர்ந்து கூவும் வரைக்கும் 2. குலசாமி வேகவேகமாய் படியிறங்கிக்...

மொச்சை

சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள்...