மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

டேனில் கார்ம்ஸ் குறுங்கதைகள்.

1.ஒரு சந்திப்பு ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில்  போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான். இவ்வளவுதான் இதைப்பற்றிச்  சொல்ல இயலும். 2.ஒரு...

ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்

அன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது... ஆனால் அதைப் பற்றி அல்ல, அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதே இன்னும் மேம்பட்டதாக  இருக்கும். திருமணம் சிறப்பானதாகவே இருந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது....

பிரிப்பான்கள்

பிரிப்பான்கள் வழமையாக  சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும். அற்புதமான அகலத்தோடு... படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு கீழே நகரும் போக்குவரத்தையும் வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி... வழமையாக மருத்துவர்களுக்கு கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும் அவை அவர்களுக்கும்...

ஆட்ரி லார்ட் கவிதைகள்

     - 1 - பெண் ஆற்றல்  பெண் ஆற்றல்  இருக்கிறது கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது எப்பொழுதும் உணர்கிறேன் என் இதயம் துடிக்கிறது என் கண்கள் திறக்கும்பொழுது என் கரங்கள் நகரும்பொழுது என் வாய் பேசும்பொழுது நான் இருப்பதை உணர்கிறேன் நீங்கள்  ?    ...

முடிவில்லாத ஒரு கதை

நீண்ட நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு இரண்டு மணி கழிந்திருந்த போது, எதிர்பாராத விதமாய், என்னுடைய வரவேற்பறைக்கு ஓடி வந்த சமையல்காரி வெளிறிப்போய், பதற்றத்துடன், பக்கத்து வீட்டுச் சொந்தக்கார மூதாட்டி மிமோதி...

தோட்டங்களின் தொடர்ச்சி

சில நாட்களுக்கு முன்னர்தான் நாவலை மறுபடியும் படிக்க ஆரம்பித்திருந்தான். முக்கியமான சில வியாபாரச் சந்திப்புகளினால் கொஞ்ச நாளாக அதைப் படிப்பதை நிறுத்தியிருந்தான், தனது பண்ணைக்கு மீண்டும் ரயிலில் போகும் நேரத்தில் இப்போது அதை...

ஹென்றி லாஸன் கவிதைகள்

எழுதப்படாத புத்தகங்கள் எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும் முடிவிலென்னவோ அதே கதைதான் நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை எழுதாமலேயே சாகப்போகிறோம் நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம் எழுதப்படாத புத்தகங்கள் வரையப்படாத ஓவியங்கள் இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை… பதிப்பிக்கப்படாத நம் ஆகச்சிறந்த சிந்தனைகளோடு நாமும் ஒருநாள் இவ்வுலகை விட்டு...

தினா நாத் நதிம் கவிதைகள்

1. உடைந்த கண்ணாடி ஒன்று உதவாப் பொருளாய் வீசப்பட்டது ஒரு மாடு அதை உற்றுப் பார்த்தது நாய் ஒன்று வந்து அதன் மீது மூச்சுவிட்டது மனநிலை பிறழ்ந்த ஒருத்தி அக்கண்ணாடியை எடுத்து அவளின் கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள் அதற்குப் பிறகு யாருக்கும் தெரியாது அந்தக் கண்ணாடிக்கு என்ன நேர்ந்ததென்று 2. ஒரு மண் பாத்திரம் மழைத்துளிகளால் கழுவப்பட்ட பின்பு பெண்ணின்...

பட்டங்கள்

  ஒவ்வொருமுறையும் அப்பாவைப்பற்றி அம்மா புதிய புதிய கதைகளாக தான் சொல்லிக் கொண்டிருப்பார்.  அந்தக் கதைகளுக்கு முடிவே கிடையாது . ஒருமுறை சொல்லுவார் 'உங்க அப்பா நம்மள எல்லாரையும் விட்டுட்டு ஓடிப் போய்ட்டாரு' என்று. ...

உயரே ஒரு நிலம்

நான் சிறுமியாக இருந்த போது ஒரு முறையும், பின் வளர்ந்த பருவத்திலுமென இருமுறை எனது வாழ்க்கையில் பேராசிரியர் பைன் அவர்களின் உதவியை  நாடிச் சென்றிருக்கிறேன்.எனது பதினோராவது வயதில், விவரிக்க இயலாததொரு மன அழுத்தத்தால்...