ஜப்பானிய இலக்கியம்
ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைப் புதிதாகப் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக குறைந்தபட்சம் நூறு புத்தகங்களேனும் உள்ளன. ஆசிய இலக்கியத்திற்கு அந்த ஆடம்பரம் இல்லை. ஜப்பான் இலக்கியம் என்று சொன்னால், முரகாமியையோ இல்லை நோபல்...
உள்நோக்கிச் செல்லும் குறுகிய பாதை – மட்சுவோ பாஷோ
மட்சுவா பாஷோ (1644-1694)
பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என நிறைய நடந்துவிட்டன நம் சூழலில்....
ஜப்பானிய மொழியில் திருக்குறளும் ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகளும்..
"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தக் குறள்” என்றாள் ஓளவைப் பாட்டி. இன்றைக்கு உலகப் பொதுமறை என அறியப்படும் திருக்குறள் சுமார் 41 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு...
கார்வை
எம்.வி.வி இளமையில் தன் சம வயது நண்பர்களிடம் பேசி களித்து பகடி செய்துகொண்ட காலங்கள் வேறு. அதெல்லாம் எங்களுக்கு செவி வழி செய்திகள்தான். அவர் எப்பவும் சீரியஸாத்தான் பேசுவார் என்று பிற்காலத்தில் அவரோடு...
பின்-நவீனத்துவ விமர்சனங்களின் போதாமை
- டான் குயிக்ஸாட்டை முன்வைத்து -
செர்வான்டிஸின் 'டான் குயிக்ஸாட்' ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நீட்ஷேவின் குயிக்ஸாட் வேறு, தஸ்தாயெவ்ஸ்கியின் குயிக்ஸாட் வேறு, காஃப்காவின் குயிக்ஸாட் வேறு.. அடோர்னோவின் நவீனத்துவ வாசிப்பில்...
ஜெல்லி
தற்போது இஸ்ரேலில் வசிக்கிறோம்.
எங்கள் வீட்டு சன்னலுக்கு வெளியே மத்தியத்தரைக் கடலும், ஹைஃபா துறைமுகமும் தெரியும். ஒரு தீவில் இருக்கும் மலையின் மீதிருந்து வெளியே பார்த்தால் கடலும், கரையும் தெரியுமே அதுபோல.
அவ்வப்போது கடற்கரைக்குப் போவதுதான்...
கத்திரிக்காய் சித்தன்
"சாதி மீறி காதலித்தது, நிலவுரிமைகள் சார்ந்து ஆதிக்க சக்திகளுடன் முரண்பட்டது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று வீரமாக போராடியது, புதையல் தோண்டுவது மாதிரியான பல மூட நம்பிக்கைகளுக்கு உயிர்பலி கொடுத்தது, ராஜாக்கள், ஜமீன்தார்கள்,...
‘சந்திரப் பிறையின் செந்நகை’
1
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே...
தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்
தனது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து...
மறக்க முடியாத மனிதர்
தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...















