படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

முகம் புதை கதுப்பினள்

”முதல் தலைகோதல் நினைவிருக்கா?” தலைவிரிகோலமாக ஆய்வுமேடையில் படுத்துக்கொண்டு மருத்துவர்களுக்கு காத்திருக்கும் வேளையிலா இப்படி ஒரு கேள்வி? கழிவது நிமிடங்களா மணிகளா நாட்களா என்று அறியாதபடி தனியாகப் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தால் சிந்தனைகள் பல்வேறு திசைகளிலும்...

தினகரன் கவிதைகள்

1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் ஊடுருவும் ஒளியை சத்தமில்லாமல் அறைக்குள் அனுமதிக்கிறது சன்னல்   எழுந்து அருகில் சென்றதும் எங்கிருந்தோ வந்த...

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...

நகுலனின் வாக்குமூலம்

ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...

பிஜாய்ஸ் பிராந்தி

நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது....

நகுலன் கவிதைகள்

காத்த பானை காத்த பானை கொதிக்காது கரும்பு கசக்காது வேம்பு இனிக்காது என்றாலும் என்ன செய்தாலும் என் மனமே வந்தபின் போக முடியாது போனபின் வர முடியாது என்றாலும் என்ன செய்தாலும் என்றென்றே சொல்லிச் சலிக்கும் என் மனமே ஊமையே உன்மத்த கூத்தனே வாழ ஒரு வழி சாக ஒரு மார்க்கம் சொல்லவல்ல...

கடிதத்தில் நாவல்

ஒரு முற்றுப்பெறாத கடித வடிவத்தில் எழுதிய “கடிதங்கள் நவீனன் சுசீலாவுக்கு எழுதியவை” என்ற நாவலில் முற்றுப் பெறாத முதல் அதிகாரம். நகுலன் அன்புடைய சுசீலாவுக்கு, எப்பொழுதும் உன் ஞாபகம்தான். ஆனால் உனக்குத் தெரிந்ததுதானே! நான் எப்பொழுதுமே...

நகுலனின் கவிமொழி

புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து...

பிரசாரம்

எங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக...

மரத்தை மறைத்தது மாமத யானை

எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும் அவருக்கு அனுப்பியிருந்தேன். பிறகு கடிதம்...