கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்
அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...
புடுக்காட்டி
அரசு கலைக்கல்லூரி ‘தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் து.மாணிக்காசுரர், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பிஎச்.டி.’ அவர்களுக்கு அன்றைய கல்லூரிப் பணியின் கடைசி மணி நேரம் சோதனையாக அமைந்துவிட்டது. இளங்கலை இலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தாம் நடத்தும்...
செல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்
“நீ மாத்திரம் என்ன அதிகமாம்; நீயும் பத்துமாசந்தான் நானும் பத்துமாசந்தான்” என்று சொல்கிறது உண்டு. செல்லையாவைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது. நிஜமாகவே அவன் பதினொரு மாசம்!
மாசத்தை எண்ணுகிறதில் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு...
தாய்ப்பாசம் என்னும் விழுது
பர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு...
தேவதேவன் கவிதைகள்
புன்னகைகள்தாம்
புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்யாருடையதுமான காதற் பேருலகையும்…கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோகடவுள்களும் தத்துவ ஆசிரியர்களும்?
இங்கிருந்துதான்
இங்கிருந்துதான் நாம்எதையும் ஏற்றுக்கொண்டும்எதையும் மறுத்துக்கொண்டும்இருக்கலாம்.
இங்கிருந்துதான் அதுநம்மை தேர்ந்துகொண்டுநிகழவேண்டியதையெல்லாம்நிகழ்த்துவதைப் பார்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும்
என்ன செய்ய வேண்டும்எனத் தெரிந்தவன்எதையும் செய்யாமல்அதைத்தான்...
ஆண், வன்தொடரல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்துகிற மன உளைச்சலைக்குறித்துப் புரிந்துகொண்டாலே அது இந்நாவலின் வெற்றிதான்-இல.சுபத்ரா.
இனி ஒவ்வொரு கனலி இணைய இதழிலும் முழுமையான நேர்காணல் ஒன்று வெளியாகும்.அதுமட்டுமின்றி அதனுடன் ஆசிரியர் ஒருவரின் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு (சிறுகதைத் தொகுப்பு,நாவல்,கவிதைத் தொகுப்பு,அல்புனைவு)அத்தொகுப்புச் சார்ந்த நேர்காணல் கொண்டு வரலாம் என்று...
இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை
அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறதுஎன எழுதிக் கொண்டிருக்கும் போதேமத்தேயுநாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிதுதிரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டுகாதலை எப்படிக் கோருவது?
புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்போக்குவரத்து சமிக்ஞையில்...
குறுங்கதைகள்-அரிசங்கர்
சொல் கொன்றது
சனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே...
தீஞ்சுவை
வீட்டில் பெண் பார்க்கத் துவங்கியும் பெண் பற்றிய எந்தத் தேடலும் பரமசிவனிடம் இல்லை. அக்காக்களையும் தங்கைகளையும் அவரின் அப்பாவே கரையேற்றிவிட்டார்.தான் பெற்ற ஏழு பெண் பிள்ளைகளுக்கும் பரமசிவன் தான் ஒரே சகோதரன் என்பதால்...
சுகுமாரன் நேர்காணல்கள்: கவிதை குறித்த உரையாடல்
புனைகதைகளைவிடத் தன்வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும் எப்போதும் வாசிக்க சுவாரஸ்யமானவை. விளிம்புநிலையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், திருடர்கள் உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறுகள் இன்று அதிக அளவில் எழுதப்படுகின்றன. பதிப்புச் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது. இத்தகைய...















