தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்

தஸ்தயெவ்ஸ்கியின் 200 வது ஆண்டை கொண்டாடும் வகையில் கனலி வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்.

தஸ்தாயெவ்ஸ்கியின் திகிலூட்டக்கூடிய டெமான்ஸ்-ஓரான் பாமுக்

எனது பார்வையில் டெமான்ஸ் (Demons) நாவல் எக்காலத்திற்குமான மிகச் சிறப்பான நாவல். முதன் முதலாக எனது 20வது வயதில் அந்த நாவலை வாசித்தேன். அது என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை இவ்வாறுதான் கூறவேண்டும் –...

ஒரு கனவும், சில இரவுகளும்- டணிஸ்கரன்

ஃபான்தான்காவின் வானம் வழமைக்கு முன்னமே இருட்டி இருந்தது. மழை தொடங்குவதற்கு முன்னதாக வாடகைக்கு விடுதியறையொன்றை எடுத்துக்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க கையில் இருக்கும் அஸ்தலின் பம்மை குறைந்தது பத்துத் தடவைக்குமேல்...

படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு...

சூதாடி -காளிப்ரஸாத்

ஒரு மூன்றாம் மனிதனின் ஆர்வம் என்பது, எந்த ஒரு விஷயத்திலும் தவிர்க்க இயலாமல் உள் நுழைந்து, அதன் விளைவுகளைக் காண்பித்து விடக்கூடியவை. யோசித்துப் பார்த்தால், பாண்டவ கெளரவ குடும்பப் பிரச்சினையில் உள்நுழைந்து சூதாடிய...

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...

தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்

1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில்,...

தஸ்தயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் :விலகி நிற்கும் பெருமலைகள்-அஜயன் பாலா

நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என  சிலர் அவ்வப்போது புலம்புவதுண்டு, உலகம் முழுக்கவே அப்படித்தான். குறிப்பாகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய்...

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் “நிரந்தரக் கணவன் “ நாவலிலிருந்து ஒரு பகுதி

தேவாலயத்துக்கு அருகில் இருந்த காய்கறி கடையில்தான் வெல்ச்சேனினோ முதலில் விசாரித்தான். பக்கத்துத் தெருவில் இரண்டே எட்டில் அந்த ஹோட்டல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஹோட்டலின் பின்புறம் மரியா சிஸோயெவ்னாவின் சிறிய தனிவீட்டில் திரு.ட்ருஸோட்ஸ்கி வசிப்பதாகக்...

நீங்கள் இருவரும் ஒருவராய் இருந்துவிடக்கூடாதா? -இரம்யா

முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில் எழுந்துகொண்டிருக்கின்றன முழுமதிகள். கரும் இரவினை...

நிலவறைக் குறிப்புகள் ஒரு பார்வை -தேனம்மை லெக்ஷ்மணன்

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். இயல்வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு...