Saturday, September 30, 2023

தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்

தஸ்தயெவ்ஸ்கியின் 200 வது ஆண்டை கொண்டாடும் வகையில் கனலி வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்.

ஒரு கனவும், சில இரவுகளும்- டணிஸ்கரன்

ஃபான்தான்காவின் வானம் வழமைக்கு முன்னமே இருட்டி இருந்தது. மழை தொடங்குவதற்கு முன்னதாக வாடகைக்கு விடுதியறையொன்றை எடுத்துக்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க கையில் இருக்கும் அஸ்தலின் பம்மை குறைந்தது பத்துத் தடவைக்குமேல்...

தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம்....

சூதாடி -காளிப்ரஸாத்

ஒரு மூன்றாம் மனிதனின் ஆர்வம் என்பது, எந்த ஒரு விஷயத்திலும் தவிர்க்க இயலாமல் உள் நுழைந்து, அதன் விளைவுகளைக் காண்பித்து விடக்கூடியவை. யோசித்துப் பார்த்தால், பாண்டவ கெளரவ குடும்பப் பிரச்சினையில் உள்நுழைந்து சூதாடிய...

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...

நீங்கள் இருவரும் ஒருவராய் இருந்துவிடக்கூடாதா? -இரம்யா

முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில் எழுந்துகொண்டிருக்கின்றன முழுமதிகள். கரும் இரவினை...

தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்

1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில்,...

தோஸ்தோவ்ஸ்கி: பல குரல் தன்மை-எஸ்.வி.ராஜதுரை

தோஸ்தோவ்ஸ்கி படைப்புகளில் நான் முதன்முதலாகப் படித்தது, அவரது சிறையனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சிறுநாவல்: ‘சாவு வீட்டுக் குறிப்புகள்’ (Notes from the Dead House). இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நான்...

தஸ்தயேவ்ஸ்கியை அறிதல்-சரவணன் மாணிக்கவாசகம்

கல்லூரிப் படிப்பை முடித்து முதல் வந்த நேர்முகத் தேர்வின் இறுதிப்பட்டியலில் இருந்த என்னுடைய பெயர், இந்திரா கொலை நடந்து ஒத்திவைக்கப்பட்டுப் பின் வெளியிட்ட பட்டியலில் இல்லாது போனது. வேலைக்காகக் காத்திருந்த நீண்டபகல் மற்றும்...

மன்னிக்காதே நெல்லி! ‘ஜெயமோகன்’

நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும்...

கலையின் மெய்ம்மையைக் கண்டுணர்ந்த மகத்தான படைப்பாளி :தாஸ்தயேவ்ஸ்கி -உதயசங்கர்

“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு மனிதனாக இருக்க விரும்புவதே காரணம்….” (தாஸ்தயேவ்ஸ்கி...