டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்
1.உழவரே! உழவரே! விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும் தானியம் போல பற்களை மாற்றி இருக்கிறேன் உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால்முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள் உழவர், அவளைப் பார்த்தவாரே "ச்சோ! ச்சோ" என காற்றில்...
தூரிகை
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை எவ்வாறு ரசிக்கின்றது காற்றில் மிதந்து கொண்டிருக்கும்தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன வானிலிருந்த விழுந்த மழைத்துளி சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின் தவத்தினை கலைத்துவிட்டது பசிய காட்டில் திரியும் பட்டாம்பூச்சிகள் மனிதர்களையே பார்த்திருக்காது பச்சை போர்த்திய இவ்வுலகம் பட்டாம்பூச்சிகளுக்கானது கடவுள் தனது தூரிகை வண்ணங்களால் பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார் மனிதன் சுதந்திரத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க பட்டாம்பூச்சியாகத்தான் பிறவியெடுக்க வேண்டும்! ப.மதியழகன்
ஸ்ரீவள்ளி கவிதைகள்
சிலவற்றைச் சரி செய்ய முடியாதுதிடீரென
ஒரு நாள்
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
மறைந்துவிடுகின்றன
அப்படியொரு நாளுக்குப்பின்
மீண்டும் சூரியன் முளைக்கிறது
சந்திரன் முளைக்கிறது
நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன
ஆனால் இது பழகிய வானமல்ல
தலைக்கு மேல் பெரிய படுதா
இதன் அடியில்
ஒரு மரத்தில்
தூக்குமாட்டிக்கொள்ளக்கூட
முடியாது. தன்னோடிருத்தல்தன்னந்தனிமையில்
ஒரு வீணை...
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
சுவிட்சுகளை மனனம் செய்தல்பறவையினங்களில் இந்த மின்விசிறிதான்அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும் இரக்கம் கொண்டு ஒருநாள்அதைக் கூண்டிலிருந்து விடுவித்து வானத்தில் மாட்டி வைத்தேன்இப்போதுஇந்நகரத்திற்கேயான மின்விசிறியென கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது மேலும்விசிறியை இணைக்கும் மின்-வயர்களை அது பாம்புகளென நினைத்துக்கொள்ள இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டிஅறையில் ஒவ்வொரு சுவிட்சாக அமர்த்தி அமர்த்தி...
நகுலனின் வளர்ப்புக் கிளிகள்
1]
நகுலன் வீட்டில்
தரை வீழும்
கண்ணாடிக் கோப்பைகள்
உடைந்து நொறுங்குவதில்லை.2]
நகுலன் வீட்டில் யாருமில்லை.
பூனைகள் பாதயாத்திரை
போய்விட்டன.3]
நாலங்குலம் பாசம் காட்டும்
மனிதர்களைவிட
நாய்கள் மேல் என்பது
நகுலன் வாக்கு.4]
மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில்
கவிதை காணாமல் போய்விட்டிருந்தது.5]
புறவாசல் வரை வரும் சுசீலா
நகுலன் வீடேகுவதில்லை.
விந்தைதான்
ரோகிகள் சூழ்...
நீரை. மகேந்திரன் கவிதைகள்
1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியைஅந்த வரிசையில்,
பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன்
இருபது என்று சொல்லலாம்
இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும்.
முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும்.
இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும்
காலைக்கடனுக்கான அவசரம்.
மூன்றாவதாக நிற்பவன்
கே.எப்.சி கவுண்டருக்கு...
அதிரூபன் கவிதைகள்
1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி
வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை
அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு
சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி
காட்டைத் திரிக்க பெரிய...
தேவதேவன் கவிதைகள்
பெருவெளியில்தரையும் கூரையும்
நான்கு சுவர்களுமில்லாத
பெருவெளியில்
அழிந்துபோகக்கூடிய
தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஆங்கே தவழ்வதோ
அழியாப் பெருவெளியைத்
தாயகமாகக் கொண்டதாம்
அன்பு கருணை அறம் மெய்மை
என ஒளிரும் தேவதைகள்!சின்னஞ் சிறிய மலர்குத்தவைத்துக்
குனிந்து பார்க்கவைத்தது...
ஸ்ரீநேசன் கவிதைகள்
சூரியனுடன் வருவேன்நான் இங்கிருப்பேன்
இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன்
மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி
இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு
நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...
உமா மகேஸ்வரி கவிதைகள்
சூரியன் ஒளிரும் திரைகள்
வாகன கீதம்
நொறுங்கிய வளர் பிறை
பத்திரமாயிருக்கிறது
மல்லிகைச் சரத்தருகே
இருள் தித்திக்கும் மரங்கள்
சோம்பல் முறிக்கும் காலை
அங்கே ஏனோ பூக்காத
மஞ்சள் மலர்கள் இங்கே
எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில்
சிராய்தததோ
ஒரு சொல் சிலாம்பு
துடைத்தும் போகாதது.இம் முறை ஒரே...