உலராதிருக்கும் வரை
என்னதான் வாய்கிழிய "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், ஜீவகாருண்யம் என்று பேசினாலும், ஒரு கொசுக்கடி நம் உயிர்நேயத்தை ஒரு கணமாவது பல்லிளிக்கச் செய்துவிடுகிறதல்லவா? முதல்வன் திரைப்படத்தில் சுஜாதா எழுதியிருப்பார் இப்படி. "கொசுவுக்கெல்லாம்...
புதைக்கப்பட்ட கதை
கடுமையான குளிர்காலத்தின் இரவு என்பதால் தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மார்ட்டின் தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்த சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். குளிருக்கு அணிந்திருக்கும் இரவு உடையுடன் அவனருகே வந்து தோள்...
அலவர்த்தனம்
அமாவாசை வானம் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தபோது, வரிசையாக இடம் பிடித்திருந்த சைவ அசைவ சாப்பாட்டுக் கடைகள் கலைகட்டிக் கொண்டிருந்தன. சைக்கிள் பின் கேரியரில் நின்றிருந்த கேனிலிருந்து நெகிழி டம்ளர்களை...
புளகிதம்
மேகங்களுக்குப் பின்னிருந்த இளஞ்சூரியன் தன் வெளிச்சக்கரங்களால் பூமியைப் பிரகாசமாக்கிக் கொண்டிருக்க, அதன் தங்கப் பிரதிபலிப்பைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டாலும் வசுமதியாறு தயக்கத்துடனேயே நகர்ந்து கொண்டிருந்தது. கோசல்வாடி, நீரவாடு, மணலாடு, காந்தாசி எனத் தனது...
ஜீவியம்
1
அவள் ஆடைகள் வெளுத்திருந்தாலும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. முன்பொரு காலத்தில் அவள் அழகாகவும் பலரைக் கவர்பவளாகவும் இருந்திருப்பாள் எனப் பார்த்தவுடன் எவராலும் ஊகிக்க முடியும். ஆனால், இப்போது சோர்ந்திருந்தாள். லௌகீக வாழ்க்கை அவள்...
மலக்குழி
‘வைடூகேனு சொல்றாங்களே, அது உண்மையிலேயே பெரிய பிரச்சினையா? கம்ப்யுட்டர்லாம் வேலை செய்யாதுன்னு சொல்றாங்க’ அம்மாவின் தம்பி குரலைக் கேட்டு மலக்குழியிலிருந்து வெளிவந்தான். மாமா என்று அவரைப் பற்றி எண்ணுவது அன்னியமாக உள்ளது, நினைவு...
ஷார்ட் சர்க்யூட்
கால் கடுத்து நின்றிருக்கும்
இரும்புக்குக்
குளிர் நடுக்குகிறது.
அடி தெரியாமல்
தழைய தழைய
கால் போர்த்திவிடுகிறது
காடு.
"காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா" என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம்.
அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு...
வலி
வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு...
நீக்கம்
மகிபாலன் அலுவலகத்திற்குப் போக காரை எடுக்கச் சென்றபோது, அவன் அம்மா, “மகி, மாஞ்செடி எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சி பாரேன்” என்றாள். அவனை முன்பே அழைத்து வந்து, அந்தச் செடியைக் காட்டியிருக்க இயலாது. அதிகாலை...
மொச்சை
சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள்...