மூக்குத்தி – சரவணன் சந்திரன்
காவல்துறையில் நடித்துக் காட்டுவது என்பது ஒருசடங்கு. திருடர்கள் மாட்டிக் கொண்டபிறகு, எப்படித் திருடினார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று நடித்துக் காட்டச் சொல்லி அதைப் பதிவு செய்து கொள்வது சிவப்புநாடா நடைமுறை. குரங்கினைப்...
பழி-ஜா.தீபா
ராதாய்யாவின் சுருங்கிய தோல் வெய்யில் பட்டு ஒளிர்ந்தது. மதிய சாப்பாட்டுக்கான நேரம் என உணர்ந்து எழுந்து நின்றார். மெல்லிய நடுக்கம் எப்போதும்போலக் காலிலிருந்து தொடங்கியிருந்தது. நிதானித்து மூன்று படிகள் இறங்கி ஆறு அடிகள்...
ஆலடியில் – சுரேஷ் பிரதீப்
திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த...
காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
“இது இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார்.
”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில்...
வியூகம்-ஹேமா
நாங்கள் அந்த வீட்டைப் பார்க்கச் சென்றது வெளிச்சம் குன்றிய ஈரம் மிகுந்த நடுப்பகல் ஒன்றில். பலத்த மழை. வானிலிருந்து ஒளியாய் கிளைத்து பெருஞ்சத்தத்துடன் புரண்டு இறங்கும் சிங்கப்பூரின் இடிகளைப் பற்றி அறிவீர்கள் தானே!...
சாமியப்பன் – காளீஸ்வரன்
கடைசி மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் டம்ளரைக் கசக்கி வீசினான் இளங்கோ. அலுவலக நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பாருக்கு வெளியே வந்தான். புதிய பிராண்ட் கூடவே பீரும் என்பதால் அளவாகத்தான் குடித்திருந்தான். மிதமான போதை....
அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்-அசோக்ராஜ்
தலையைச் சுற்றி தரையில் சுமார் அரை அடிக்கு இரத்தம் கசிந்தபடி மல்லாந்து கிடந்த கிழவியை ஊன்றி ஒரு நிமிஷம் பார்த்தேன். கிழவியின் கண்கள் அநியாயத்திற்கு விழித்தன. ஒரு வித மிரட்சி இருந்தது. காது,...
மான்டிஸ் – வைரவன்.லெ.ரா.
‘இரவு சுவாரஸ்யமானது;
இரவு ரகசியமானது;
இரவு கொண்டாட்டமானது;
இரவு கவலையானது;
இரவு மோகனமானது;
இரவு சூன்யமானது;
இரவு தந்திரமானது;
இரவு கொடுமையானது;
இரவு உனக்குரியது;’
இருளில், ஓர் மஞ்சள் நிற குண்டு பல்ப் விட்டுவிட்டு எரியும் அடுக்குமாடிக் குடியிருப்பின் குப்பைகள் கொட்டுமிடத்தில் காலியான பியர் பாட்டில்களைப்...
தொட்டால் தொடராது – லதா ரகுநாதன்
அத்தியாயம் 1
ராம் அந்த மூத்திரச் சந்தின் கடைசி கோடிக்குக் கால்களை அகல விரித்து அவசரமாக நடந்து சென்றான். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை அவ்வப்போது உயர்த்தி பார்த்துக்கொண்டும் நடந்தான். நிமிடங்கள் என்னவோ நிமிடமாகத்தான் நகரப்போகிறது....
கண்காணிப்பு-க.கலாமோகன்
வசந்தியை நான் பல நாள்களாகத் தொழில் இடத்தில் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விடுமுறையா? நிச்சயமாக இல்லை. அவளது விடுமுறை மாதம் எனக்குத் தெரியும்.
அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் அவளுக்கு நிறைய நண்பர்களும் நண்பிகளும்...