தாலாட்டு-ஆதவன்
வருடம் தவறாமல் இந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார்.
இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...
அவக்
காளியாத்தாள் ஒய்யாரமாகச் சப்பரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்சுற்றி வருவதைத் தூரத்தில் நின்று பார்த்தார் சீனிச்சாமி. ”வாழ்நாள் பூரா உன்னை தோளில தூக்கிச் சுமந்து சுத்துனேன். கடைசியில கைவிட்டுட்டீயே” என விரக்தியாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டார்....
வழித்துணை
கன்னத்தில் செல்ஃபோனின் ’விர்ர்’ என்ற அதிர்வை உணர்ந்தேன். தூக்கத்தின் அரைமயக்கத்தில் அது கைக்குள் பொத்திப்பிடித்த குருவியின் சிறகதிர்வைப் போல நேராக நெஞ்சில் படபடத்தது, பதறி சற்று கைவிலக்கினால் பறந்துவிடும் என்பது போல.
நெடுநேரமோ அல்லது...
சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்
கதவைத் திறந்த கலாவிடம், ‘வீட்ல யாரும் இல்லைல’ என்றபடி உள்நுழைய முனைந்தவனைத் தடுத்தவள் ‘என்ன வேணும், இப்ப வந்திருக்கீங்க’ என்றாள். ‘பேசணும், போன்ல சொன்னேனே’.
‘இருங்க, கல்பனா வீட்ல இல்லையா’
‘உள்ள வந்து சொல்றேன், வழி...
கனவில் நனைந்த மலர்
அந்த அப்பார்ட்மெண்ட் எங்கும் பச்சை நிறமொத்ததாய் இருந்தது. முகமற்ற பொம்மைகளின் வரைபடங்கள் பென்சில் ஸ்கெட்சாகவோ வண்ணக்கலவையாகவோ சுவரெங்கும் பரவிக் கிடந்தன. வானமும் கடலும் சேர்ந்தது போன்ற படம் ஜெசிந்தாவை ஈர்த்துக் கொண்டே இருந்தது....
குரல்கள்
வராண்டா கிரில் வழியாக மதில் சுவரிலிருந்து மரத்துக்குத் தாவிய அணிலைப் பார்த்தார். இதே வராண்டா கிரில்லை பிடித்துக்கொண்டு அணிலைக் கண்டவுடன் குதித்த தன் மகனை நினைத்துக்கொண்டார். சூரிய ஒளி க்ரில்லில் இருந்த இரும்புப்...
நயனக்கொள்ளை
காலை நடைப்பயிற்சியை பூங்காவில் முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் வழக்கம்போல அப்பாவைப் பார்த்து உரையாடுவதற்காக வீட்டுக்கு வந்தார் அருணாசலம் மாமா. ஒரு காலத்தில் இரண்டு பேரும் வருஷக்கணக்காக ஒன்றாக நடந்து சென்றவர்கள். ஆறு வருஷங்களுக்கு...
புல்லின் வாசம் -ஆ.ஆனந்தன்
காலை வெயில் கொஞ்சம் சுளீரென்று உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த பைக்குள் இருக்கும் பழங்களின் கனத்தாலும் வேகமாக நடப்பதும் கொஞ்சம் மெதுவாக நடப்பதுமாக நான் தெருக்களைக் கடந்து கொண்டிருந்தேன்.சென்ற வருடம் வீடுவரை...
ஓங்குபனை-அருணா சிற்றரசு
இதுவரை யாருமே நடந்திடாத அன்றைய நாளுக்கான புதுப்புழுதியுடன் சுருளிலிருந்து விடுபட்ட பந்திப்பாய் போல விரிக்கப்பட்டிருந்தது அந்தக் குறுஞ்சாலை. பக்கவாட்டிற்குப் பனைமரங்களையும், தலைமாட்டிற்கோர் ஆலமரமுமாய் கிளைப் பாதைகளைப் பரப்பிக் கொண்டு கீழ்த்திசையிலிருந்து இன்னும் கிளம்பாத...
பார்த்திருத்தல்-வண்ணதாசன்
ஆப்பிள், ஆரஞ்சு கூட இல்லை. வெறும் நான்கு மொந்தான் பழங்கள் வாங்குவதற்கு யாராவது இப்படி பைக்கில் அலைவார்களா? அப்பாவுக்கு கோழிக்கூடு, பச்சை நாடான் பழம் எல்லாம் பிடிக்காது. மொந்தான் பழம்தான் வேண்டும். அதுவும்...