படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்

ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட...

விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும்

ஒரு படைப்பாளன் தனது படைப்பை யாருக்கு எடுத்துச் சொல்ல அவன் கொள்கிற களங்கள் மிக முக்கியமாக உள்ளது. யாரும் சொல்லாத செய்தியை, களத்தை, நிகழ்வை அல்லது சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுதான் ஒவ்வொரு...

ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்

இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து...

பல்லக்கும் சமூக அநீதியும் …

இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம்,எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன். தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார். பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக...

பொட்டி

இரயில் மூன்று மணி நேரம் தாமதமாக நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பத்தைந்து நிமிடத்திற்கு வந்து சேர்ந்தது. நடைமேடையில் முருகேசு இறங்கியதும் பார்வையை நீள விட்டார். அவர் பெட்டிக்கு முன்னிருந்த வேறு பெட்டிகளில் இருந்து...

மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும்...

கனலி 2024 வெளியீடுகள்

2024 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் திருவிழாவில் கனலி சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியாகின்றன. மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்: ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் தமிழில் -கீதா மதிவாணன்  விலை :உரூபாய் 300 தொகுப்பிற்கான கீதா மதிவாணன் முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான...

“அடிப்படை மனித விழுமியங்களுக்குக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்” எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி. 1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில்...

பருத்திப்பூ

முனியாண்டி சேர்வை தன்னுடைய நண்பரான சாலப்பட்டி ராசுவிடம், “நானும் கவனிச்சு பாத்திட்டேன்பா. அஞ்சு தலை ஒண்ணா சேந்துருது. ஆனா நாலு மொலை என்னைக்குமே சேர மாட்டீங்குது” என்றார் காதைக் கோழி இறகை வைத்துச்...

விபத்து

சாலையோர மரங்களில் இன்னும் உதிராமல் மீதமிருந்த மஞ்சள் நிற இலைகள், காற்றில் அசைவது தெருவொர மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு நடனமென நிகழ்ந்துக்கொண்டிருந்தது. சற்றுமுன் பெய்து ஓய்ந்திருந்த மழையில் சாலைகள் முழுக்கவே நனைந்திருந்தன....