Sunday, Jun 26, 2022
Homeபெட்டகம்

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக

  முகத்தில் சில்லென்று தண்ணீர் படவும் எரிச்சலுடன் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மா சுமந்துகொண்டு போன தண்ணீர்க் குடத்திலிருந்து தளும்பித் தரையில் வழிந்த நீர் சிதறி கன்னத்தில் தெறித்திருந்தது.

குரு வணங்குகிறேன். தாங்கள் விதித்தபடியே தங்களையல்லாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். தாங்கள் ஏன் என் கனவில் வரவில்லை? தங்கள் உருவத்தை வெகுவாயும் மனத்தில் விளம்பிக்

நீண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலையில் எழுந்து தனக்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற

கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப்

சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்ல பச்சை விளக்குக்காக மைலோ பாக்கெட்டை உறிஞ்சிக்கொண்டே லாவண்யா காத்திருந்தபோது தன்னைப் பார்த்துவிட்டுச் சட்டென்று விலகி நான்கைந்து அடிகள் முன்னால் போய் நின்ற

தாழைப் பள்ளத்திலிருந்து மேலேறி 'ல' வளைவு வரவும் கனத்த வேப்பமரத்தடியில் முருகேசன் இல்லை என்பது தெரிந்தது. அவன் வந்திருக்கக்கூடாது என்றுதான் வேகவேகமாக நைலான் சாக்குப் பையைக் கக்கத்தில்

அந்தப் பறவை யூதாவை அவன் வீட்டிலிருந்து கொத்திக் கொண்டு வந்து இந்தப் பீக்காட்டிலே போட்டது. யூதா இப்படித்தான் நம்பினான். ஆயா சொல்லும் கதைகளில் செட்டையடித்து பறக்கும் பறவை.

அந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட

                  “ முதலில் வாழ்வதற்காக எழுதத் தொடங்குகிற நாம் நாளடைவில்               சாகாமல் இருப்பதற்காக எழுதுகிறோம் என்பதாக முடிந்து போகிறோம்.”                                                                     - கார்லோஸ் புயந்தஸ் , மெக்சிகன் நாவலாசிரியர்.   பிறப்பு , இறப்பு ஆகிய இரண்டுக்குமிடையேதான் கலைஞனின் உன்னதமான சுயம் உயிர்த் துடிப்போடு வாழ்கிறது. இந்த சுயத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தனது கலையால்

error: Content is protected !!