சார்லஸ் சிமிக் கவிதைகள்
ஓவியத் திரைச்சீலை
அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது.
அதில் மரங்கள் உள்ளன,
நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன.
ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது.
இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து...
யஹூதா அமிச்சாய் கவிதைகள்
1] இபின் கேப்ரோல்
சில நேரங்களில் சீழ்
சில நேரங்களில் கவிதை
ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது
மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது
என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம்
அவர் பச்சை பருத்திக் கம்பளிகளால் போர்த்தப்பட்டவர்.
ஓ, சதைப்...
ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்
1) முன்னொரு காலத்தில் வருந்தினேன்
முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன்
ஒல்லியாகவும்
வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும்
தென்பட்ட ஒரு மனிதனுக்காக
பிறகொரு நாள் நாங்கள்
அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம்
அதே கண்ணாடியின் முன்பாக
2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்
பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்
ஒருவருக்கும் என்னை
அடையாளம்...
ஃபிலிப் லார்கின் கவிதைகள்
1.
புலர் காலை
கண் விழித்து
தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும்
திரைசீலைகளை விலக்கி
மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும்
இவைபோலவே
உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும்
எத்தனை விசித்திரமாய் உள்ளது.
2.
சென்றுகொண்டிருத்தல்
வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத
எந்த விளக்கையும் ஏற்றாத
ஒரு மாலைப் பொழுது வந்துகொண்டிருக்கிறது
தூரத்திலிருந்து காண
பட்டுபோல் தெரிந்தாலும்...
ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்
ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...
ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்
1.
நன்கறீவீர் நீங்கள்
இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை
ஓர் ஒற்றை ஆடையைத் தவிர
அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன்
காதலும் அப்படியே!
2.
என்னுள் எரியும் எது
உள்ளத்தின்
பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?
உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது
என் அனைத்துப் புலன்களும்
சாம்பல் முடிவுற்று
உள்ளத்தின் அகம்புறமும்...
பிரிப்பான்கள்
பிரிப்பான்கள்
வழமையாக சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும்.
அற்புதமான அகலத்தோடு...
படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு
கீழே நகரும் போக்குவரத்தையும்
வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி...
வழமையாக மருத்துவர்களுக்கு
கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும்
அவை அவர்களுக்கும்...
ஆட்ரி லார்ட் கவிதைகள்
- 1 -
பெண் ஆற்றல்
பெண் ஆற்றல் இருக்கிறது
கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது
மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது
எப்பொழுதும் உணர்கிறேன்
என் இதயம் துடிக்கிறது
என் கண்கள் திறக்கும்பொழுது
என் கரங்கள் நகரும்பொழுது
என் வாய் பேசும்பொழுது
நான் இருப்பதை உணர்கிறேன்
நீங்கள் ?
...
ஹென்றி லாஸன் கவிதைகள்
எழுதப்படாத புத்தகங்கள்
எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும்
முடிவிலென்னவோ அதே கதைதான்
நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை
எழுதாமலேயே சாகப்போகிறோம்
நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை
செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம்
எழுதப்படாத புத்தகங்கள்
வரையப்படாத ஓவியங்கள்
இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை…
பதிப்பிக்கப்படாத
நம் ஆகச்சிறந்த சிந்தனைகளோடு
நாமும் ஒருநாள்
இவ்வுலகை விட்டு...
தினா நாத் நதிம் கவிதைகள்
1.
உடைந்த கண்ணாடி ஒன்று
உதவாப் பொருளாய் வீசப்பட்டது
ஒரு மாடு அதை
உற்றுப் பார்த்தது
நாய் ஒன்று வந்து
அதன் மீது மூச்சுவிட்டது
மனநிலை பிறழ்ந்த ஒருத்தி
அக்கண்ணாடியை எடுத்து
அவளின்
கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள்
அதற்குப் பிறகு
யாருக்கும் தெரியாது
அந்தக் கண்ணாடிக்கு
என்ன நேர்ந்ததென்று
2.
ஒரு மண் பாத்திரம்
மழைத்துளிகளால் கழுவப்பட்ட பின்பு
பெண்ணின்...