மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்

அன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது... ஆனால் அதைப் பற்றி அல்ல, அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதே இன்னும் மேம்பட்டதாக  இருக்கும். திருமணம் சிறப்பானதாகவே இருந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது....

தூய திருமணம்.

சலவை இயந்திரம் வேலையை முடித்ததும் எழுந்த பீப் ஒலிகளைக் கேட்டு கண்விழித்துக்கொண்ட என் கணவர் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார். “காலை வணக்கம்... மன்னித்துக்கொள், நீண்டநேரம் உறங்கிவிட்டேன். இங்கிருந்து இந்த வேலையை நான் தொடரட்டுமா?” வார...

லாப்ஸ்டர் விருந்து

1 கொத்தாக இறந்து கிடந்தன லாப்ஸ்டர்கள். இனி அவற்றால் எந்த ஆபத்தும் நமக்கில்லை. குவியலாகக் கிடந்த அவற்றின்  ஓடுகள் பழுப்பு நிறத்திலில்லை. . சிவப்பாகவும் இல்லை. நீலமாகவும் இல்லை. மாறாக அவை கண்களின் நிறத்தைப்...

ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்

தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி...

இன்றைக்கும் காந்தியடிகள் பொருத்தமாக இருப்பதற்கானப் பத்து காரணங்கள் ...

(மகாத்மாவின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சில சிந்தனைகள்) அடுத்த வாரம், மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அனுசரிப்போம். அவர் உயிர்நீத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் காந்தியார்...

பணம் பத்தும் செய்யும்

பாலில் இருக்கும் மலாய் (மேலாடை) எவ்வளவு செறிவானதாக இருக்குமோ அது போல படாடோபமான இளவரசன் ஒருவன் அரசர் வாழ்ந்து வந்த சாலையில் அவருடைய அரண்மனைக்கு எதிராகவே ஓர் அரண்மனை கட்டினான். அது அரசருடைய...

மேரி ஆலிவர் கவிதைகள்

கற்களால் உணரயியலுமா? கற்களால் உணரயியலுமா? அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா? இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும் அமைதியடையச் செய்துவிடுமா? நான் கடற்கரையில் நடக்கும்போது வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப் பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன் பிறகு அவ்விதமே செய்கிறேன். மரம் தனது பல கிளைகளை உயர்த்தி உவகையடைகிறதே, ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா? முகில்கள் தங்களது மழைமூட்டையை அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா? உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று. நான் அத்தகைய முடிவை எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன். ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும். ** நான் கடற்கரைக்குச் சென்றேன் நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன் நேரத்திற்கேற்ப அலைகள் வந்துபடியும் சென்றபடியும் இருந்தன, ஓ, நான் சோகமாக இருக்கிறேன் என்ன செய்யட்டும்— நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன். தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது: மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது. ** எப்போது அது நிகழ்ந்தது? எப்போது அது நிகழ்ந்தது? “நிறையக் காலத்திற்கு முன்பு” எங்கு நிகழ்ந்தது? “தூராதி தூரத்தில்” இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது? “எனது இதயத்தில்” இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்? “நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!” **   இந்தக் காலையில்  இந்தக் காலையில் செங்குருவிகளின் முட்டைகள் பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள் உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாது உணவு எங்கிருந்து வருகிறது என்று, வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!” வேறு எது குறித்தும்,...

எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?

அவள் பெயர் கோன்னி. வயது பதினைந்து. கூச்சத்துடன் கொக்கரித்தபடியே சட்டெனக் கழுத்தைத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டோ, மற்றவர்களின் முகத்தைப் பார்த்தோ தன்னுடையதைச் சரிபார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும் கவனித்த, எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்த,...

திரை (இந்தி) – இஸ்மத் சுக்தாய் ,தமிழில்- அனுராதா கிருஷ்ணா சாமி

வெள்ளை நிற படுக்கை விரிப்பு விரித்திருந்த அந்த கட்டிலில், நாரைகளை விடவும் அதிகமான வெள்ளை முடிகள் கொண்டவள் போலவும், அசிங்கமான ஒரு பளிங்கு மூட்டையைப் போலவும் பாட்டி கிடந்தாள். மையிட்ட தடம் மட்டும்...

WILD GREEN

"The sales and technical team which trains our clients in product usage of the products and our biggest client 'Be way hospitality' at quanty,...