படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

என்புதோல் உயிர்

பல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள் உறக்கமின்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். சிலர்...

வாராணசி கவிதைகள்

  காலம்         இங்கே   காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று  காலங்களுக்கு அப்பாலான  காலம்    இங்கே   இன்று பிறந்த இன்றும்  நாளை பிறக்கும் நாளையும்  பிறந்ததுமே   இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன    இங்கே   அன்றாடம் உதிக்கும் சூரியன்  முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது  முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது    இங்கே  காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்  யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்  மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.    இங்கே   ஒசிந்து...

அழகுப் பிள்ளை

அழகுப் பிள்ளை நின்று கொண்டிருந்ததே ஹெட்மாஸ்டர் கண்ணில் படவில்லை. இரண்டடி மட்டும் உயரமானவர் அழகுப் பிள்ளை. ஹெட் மாஸ்டரின் மேஜைக் கால்கள் அவரை விட உயரமாக இருந்ததால் மேஜைக்குக் கீழே அந்தக் கால்களுக்கு...

அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ் என நீ உச்சரிக்கும்போதெல்லாம்  இருவாட்சியின் பெரும்பாத நிழல் என் மேல் கவியும் உன் நாக்கு  மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி  பற்களில் பட்டு  உதடுகளைக் குவிக்கும்போது  பனி பிளந்து இலை குளிர்ந்து  காற்று தணியும்  மழைப் பெய்து ஓய்ந்த கடலின்  நீலம் பாய்ந்த உன் முகத்தில்   அச்சொல் பூரணமடையும் போது பிறை தோன்றும் பின் மறையும் இடையில் விரியும் துண்டு வானம்  எனக்கும் உனக்கும் மட்டுமே. ———————————————— பூப்பனி  பெய்யும் ஒரு...

ஏதேன் காட்டின் துர்க்கந்தம்

போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின்  வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில்...

நித்தியமானவன்

இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன்.  புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில்...

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்

மயக்கம் தந்த பெண் என் மேலதிகாரியாக ராமன் நாயர் இருந்தார். கடுமையான ஆள். ஒரு தடுப்புக்குப் பின்னால் அவருடைய உதவியாளனான நானும், தட்டச்சரும் அமர்ந்திருப்போம். இந்தக் கண்ணாடி அறைக்குள் வருவதற்கே கீழே உள்ளவர்கள் பயப்படுவார்கள்....

கம்மா > மடைகள் > வாமடை

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும்  சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது  குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான  கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய் கருவுக்குள் நானிருக்கையில் பால்சோறு பிசையும்  கிண்ணத்தின் அளவே...

இராவணத் தீவு – பயணத் தொடர் 4

மலைக்கோவில் நோக்கி ( மாத்தளை அலுவிகாரை)   " உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு " - ரூமி விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க...

மரணம்

அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...